30 வருட இனிய வாழ்க்கை: சுரேஷ் சக்கரவர்த்தியின் திருமண புகைப்படம் வைரல்
- IndiaGlitz, [Thursday,January 21 2021]
பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்களில் ஒருவரான சுரேஷ் சக்ரவர்த்தி மிகவும் நகைச்சுவையாகவும் திறமையாகவும் இளவயது போட்டியாளர்களுக்கு சவாலாகவும் விளையாடினார் என்பது தெரிந்ததே. அவரது ஒவ்வொரு நடவடிக்கையும் பார்வையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற நிலையில் திடீரென நான்காவது வாரம் அவர் எதிர்பாராத வகையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டது பார்வையாளர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது
இருப்பினும் பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர்களில் ஆரிக்கு அடுத்தபடியாக அதிக ரசிகர்களை பெற்றவர் சுரேஷ் சக்கரவர்த்தி தான் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பின் தனது சமூக வலைத்தளத்தில் ஆக்டிவாக செயல்பட்டு வரும் சுரேஷ் சக்ரவர்த்தி சற்று முன் தனது திருமண நாள் குறித்த பதிவு செய்துள்ளார்
திருமணமாகி 30 வருடங்கள் ஆகிவிட்டதாக தெரிவித்துள்ள சுரேஷ், 30 வருடங்களுக்கு முன் திருமண தினத்தன்று எடுத்த பழைய புகைப்படங்களையும் தற்போது மனைவியுடன் இருக்கும் புகைப்படங்களையும் பதிவு செய்துள்ளார் என்பதும் இந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது
மேலும் அவர் தனது மனைவிக்கு அளித்துள்ள திருமண மெசேஜ் செய்தியில் ’30 வருடங்கள் என்னுடன் வாழ்வது என்பது எளிதான ஒன்றல்ல, ஆனால் நீங்கள் அதை செய்து முடித்துள்ளீர்கள். நன்றி. 30ஆம் ஆண்டு திருமண வாழ்த்துக்கள். உங்களை இப்போதும் நான் காதலிக்கிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளார்