என் மகனுக்கு ஈடு இணை யாரும் இல்லை: பாலாஜி குறித்து சுரேஷ்
Send us your feedback to audioarticles@vaarta.com
பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது இறுதி கட்டத்திற்கு சென்று கொண்டிருக்கும் நிலையில் அடுத்த வாரம் பழைய போட்டியாளர்கள் மீண்டும் பிக்பாஸ் வீட்டிற்கு சிறப்பு விருந்தினராக செல்ல இருப்பதாக தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.
இந்த சீசனில் எவிக்ட் ஆனவர்கள் மற்றும் ஏற்கனவே முடிந்த மூன்று சீசனில் உள்ள ஒரு சிலர் செல்வார்கள் என்று செய்திகள் வெளிவ்ந்து கொண்டிருக்கின்றது. இந்த நிலையில் அவ்வாறு செல்பவர்களின் ஒருவர் சுரேஷ் சக்கரவர்த்தியும் என தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.
இந்த நிலையில் சமூக வலைதள பயனாளி ஒருவர் சுரேஷூக்கு வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார். ’சுரேஷ் தாத்தா உங்களிடம் உரிமையாக நான் ஒன்று சொல்கிறேன். பிக்பாஸ் வீட்டிற்கு நீங்கள் மீண்டும் செல்லப் போகிறீர்கள் என்று எனக்கு தெரியும். அங்கு போய் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய சனம்ஷெட்டியின் பவர் என்னவென்று மற்ற போட்டியாளர்களுக்கு சொல்லுங்கள். அதேபோல் பாலாவை உங்கள் பையனாக பார்த்தேன் என்று சொன்னீர்கள். உள்ளே போய் உங்கள் பையனுக்கு அறிவுரை கூறுங்கள். அவர் செய்கிற தவறுகளை எடுத்து சொல்லுங்கள்’ என்று கூறியுள்ளார்.
அதற்கு சுரேஷ் சக்கரவர்த்தி பதிலளிக்கையில் ’என்னுடைய சொந்த மகனுக்கு ஈடு இணை யாரும் இல்லை என்று கூறியுள்ளார். இருப்பினும் அவர் தனது மகன் போல் நினைத்த பாலாஜிக்கு அறிவுரை கூறுவார் என்றும் ஆரிக்கு பாராட்டு தெரிவிப்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
I have realised nobody can replace my own son
— Suresh Chakravarthy (@susrisu) January 3, 2021
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com