'நீங்க பேசும்போது பச்சையா தெரியுது': மீண்டும் சுரேஷ்-ரியோ மோதல்!
Send us your feedback to audioarticles@vaarta.com
பிக்பாஸ் நிகழ்ச்சியில் தான் இருக்கும் வரை அனைத்து புரமோவிலும் தன்னுடைய முகம் தான் வரவேண்டும் என திட்டமிட்டு, டியூசன் எடுத்து விட்டு சுரேஷ் சக்ரவர்த்தி பிக்பாஸ் வீட்டிற்கு வந்திருப்பார் போல் தெரிகிறது. அதனால் கடந்த 10 நாட்களாக நடைபெற்று வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கிட்டத்தட்ட அனைத்து புரமோவிலும் அவருடைய காட்சி தான் வருகிறது. ஆஜித், கேப்ரில்லா, சம்யூக்தா, ஷிவானி உள்பட ஒருசிலர் இன்னும் இருக்கும் இடமே தெரியாமல் இருக்கும் நிலையில் சுரேஷ் சக்ரவர்த்தி பாசிட்டிவ்வாகவோ அல்லது நெகட்டிவ்வாகவோ தற்போது இந்த நிகழ்ச்சியின் ஹீரோவாகி விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் இன்று இரண்டாவது புரமோவில் மீண்டும் சுரேஷ் சக்ரவர்த்தி மற்றும் ரியோ வாக்குவாதம் செய்கின்றனர். இந்த வீட்டில் குரூப்பிஸம் இருக்கிறது என்று எப்படி நீங்கள் சொல்லலாம் என்று ரியோ கேட்டுவிட்டு, அதன்பின்னர், ‘நீங்கள் பேசும்போது பச்சையாக தெரிகிறது, நீங்கள் என்னை பற்றி தான் பேசுகிறீர்கள் என்று சொல்ல, அதற்கு ரியோவை சமாதானப்படுத்த சுரேஷ் சக்ரவர்த்தி ஏதோ கூற முயற்சித்தாலும் சுரேஷை ரியோ பேசவிடாமல் மடக்கி வருவதால் சுரேஷ் பேச முடியாமல் திணறி வருகிறார்.
அதன் பின்னர் அறந்தாங்கி நிஷாவை மாட்டிவிடும் வகையில் சுரேஷ் பேசி சமாளித்தாலும் ரியோ அவரை விவில்லை என்பதே இன்றைய இரண்டாவது புரோமோவில் உள்ள காட்சிகளாக உள்ளது. மொத்தத்தில் ரியோ உள்பட அனைத்து போட்டியாளர்களும் சுரேஷ் சக்கரவர்த்தியை கட்டம் கட்டி விட்டார்கள் என்பது தெளிவாக தெரியவருகிறது.
#Day10 #Promo2 of #BiggBossTamil #பிக்பாஸ் - தினமும் இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BBTamilSeason4 #BiggBossTamil4 #VijayTelevision pic.twitter.com/axvSwxqyOe
— Vijay Television (@vijaytelevision) October 14, 2020
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments