சந்தானம் கொடுத்த லவ் லெட்டர்: 'மாஸ்டர்' நடிகை வெளியிட்ட புகைப்படம் வைரல்!

  • IndiaGlitz, [Sunday,May 16 2021]

தளபதி விஜய் நடித்த ‘மாஸ்டர்’ திரைப்படத்தில் நடித்த நடிகை ஒருவர் சந்தானம் தனக்கு கொடுத்த லவ் லெட்டர் குறித்த புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து உள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

தளபதி விஜய் நடித்த ‘மாஸ்டர்’ தல அஜித் நடித்த விஸ்வாசம் உள்பட பல திரைப்படங்களில் நடித்தவர் நடிகை சுரேகா வாணி. இவர் சுரேஷ்தேஜா என்பவரை திருமணம் செய்து கொண்டார் என்பதும் சுரேஷ் தேஜா கடந்த 2019ஆம் ஆண்டு உடல்நலக்குறைவால் காலமானார் என்பதும் இந்த தம்பதிக்கு சுப்ரீதா என்ற மகள் இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் நடிகை சுரேகா வாணி அவ்வப்போது தனது சமூக வலைதளங்களில் கவர்ச்சியான புகைப்படங்களை பதிவு செய்து வருகிறார் என்பதும், இந்த புகைப்படங்களுக்கு லைக்ஸ்கள் குவிந்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் நடிகை சுரேகாவின் கவர்ச்சி புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் மீம்ஸ்களை பதிவு செய்து வருகின்றனர். அதில் ஒன்று சசிகுமார் நடித்த ’பிரம்மன்’ படத்தில் சந்தானம் சுரேகா வாணிக்கு லவ் லெட்டர் கொடுக்கும் புகைப்படத்தை பதிவு செய்து ’சந்தானம் இவருக்கு லவ் லெட்டர் கொடுத்தது தப்பே இல்லை’ என்று மீம்ஸில் குறிப்பிட்டுள்ளனர். இந்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் சுரேகா வாணி பதிவு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.