விஜய் ஆண்டனியின் நண்பராக நடிக்க ஒப்பந்தமான பிரபல சீனியர் நடிகர்!

  • IndiaGlitz, [Monday,November 08 2021]

பிரபல நடிகர் விஜய் ஆண்டனி நடித்த ’கோடியில் ஒருவன்’ என்ற திரைப்படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் அவர் தற்போது ’தமிழரசன்’ ’அக்னிசிறகுகள்’ ’காக்கி’ ’பிச்சைக்காரன் 2’ ’கொலை’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் விஜய் ஆண்டனி நடித்து வரும் படங்களில் ஒன்று ’மழை பிடிக்காத மனிதன்’ என்பதும் இந்த படத்தை பிரபல இயக்குனர் விஜய் மில்டன் இயக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் தற்போது இந்த திரைப்படத்தில் சீனியர் நடிகர் சுப்ரீம் ஸ்டார் சரத்குமார் இணைந்து உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அவர் விஜய் ஆண்டனியின் நண்பராக இந்த படத்தில் நடித்து வருகிறார் என கூறப்படுகிறது.

தற்போது கோவா, டாயூ, டாமன் ஆகிய பகுதிகளில் இந்த படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு நடைபெற்று வருவதாகவும் இந்த படத்தில் பிரபல கன்னட நடிகர்கள் தனஞ்செயன் மற்றும் பிருத்வி அம்பார் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.


More News

வாலுடன் பிறந்த மனிதக் குழந்தை… அதிர்ச்சியில் விஞ்ஞானிகள்!

பிரேசில் நாட்டில் பெண்மணி ஒருவருக்கு வாலுடன் குழந்தை பிறந்துள்ளது.

கேப்டன் பதவி டாஸ்க்: நிரூப்பை மடக்கிய பிரியங்கா!

இன்று கேப்டன் பதவிக்கான டாஸ்க் நடைபெற்று வரும் நிலையில் முதல் புரோமோவில் அக்ஷரா கேப்டனாக முடியாமல் சிபி செய்த வேலையை பார்த்தோம். இந்த நிலையில் கேப்டன் டாஸ்க்கில் நிரூப் மற்றும் பிரியங்கா

'ஜெய்பீம்' ராசாக்கண்ணுவின் மனைவிக்கு ராகவா லாரன்ஸ் செய்யும் மிகப்பெரிய உதவி!

சமீபத்தில் வெளியான சூர்யா நடித்த 'ஜெய்பீம்' திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது என்பதும் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் உள்ளிட்ட பல அரசியல் பிரபலங்களும் உலகநாயகன் கமல்ஹாசன்

'மாறன்' படத்தின் மாஸ் அப்டேட் கொடுத்த ஜிவி பிரகாஷ்!

பிரபல நடிகர் தனுஷ் நடிப்பில் கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவாகி 'மாறன்' என்ற படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்தது என்பதும் தற்போது படப்பிடிப்பு முடிவடைந்து

இந்தியாவை கழற்றிவிட்டு, அரைஇறுதிக்குள் நுழைந்த நியூசிலாந்து!

ஐசிசி டி20 உலகக்கோப்பை போட்டியில் “கோப்பை“ எங்களுக்குத்தான் என்று உற்சாகத்துடன் களம் இறங்கிய இந்திய அணி தற்போது