தஷ்வந்த் தூக்கு தண்டனைக்கு இடைக்கால தடை: உச்சநீதிமன்றம்
Send us your feedback to audioarticles@vaarta.com
சென்னை போரூரை சேர்ந்த 6 வயது சிறுமி ஹாசினி கொலை வழக்கில் தஷ்வந்த் குற்றவாளி என உறுதி செய்யப்பட்டதால் செங்கல்பட்டு நீதிமன்றம் தஷ்வந்துக்கு 46 வருட சிறை தண்டனையும் மரண தண்டனை விதித்தது.
இந்த தண்டனையை சென்னை உயர்நீதிமன்றமும் உறுதி செய்ததோடு, 'குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோருக்கு தூக்கு தண்டனையே சரியாக இருக்கும் என்றும், தஷ்வந்த் தூக்குக்கயிற்றில் தொங்கும் கடைசி நொடி காமத்திற்கான கடைசி நொடியாக இருக்க வேண்டும் என்றும், தஷ்வந்த் செய்த குற்றத்திற்கு தூக்கு தண்டனையை விட வேறு தண்டனை ஈடாகாது என்றூம் கருத்து தெரிவித்தது.
இந்த நிலையில் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் இந்த வழக்கு மேல்முறையீடு செய்யப்பட்ட நிலையில் தஷ்வந்தின் தூக்கு தண்டனைக்கு இடைக்கால தடை விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments