சசிகலா சரண் அடைய கால அவகாசமா? சுப்ரீம் கோர்ட் முக்கிய உத்தரவு

  • IndiaGlitz, [Wednesday,February 15 2017]

சொத்துக்குவிப்பு வழக்கில் 4 வருடங்கள் சிறை தண்டனை பெற்ற அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா, நீதிமன்றத்தில் உடனே சரண் அடைய வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. ஆனால் சசிகலா தரப்பில் இன்று உச்சநீதிமன்றத்தில் ஒரு கோரிக்கை வைக்கப்பட்டது. தனது உடல் நிலையை கருத்தில் கொண்டு சரண் அடைய இரண்டு வார கால அவகாசம் வேண்டும் என்று கேட்கப்பட்டிருந்தது.
ஆனால் இந்த கோரிக்கையை உச்சநீதிமன்றம் சற்றுமுன் நிராகரித்தது. சசிகலா பெங்களூர் நீதிமன்றத்தில் உடனடியாக சரண அடைய வேண்டும் என்று அதிரடியாக உத்தரவிடப்பட்டுள்ளது.
இதனை அடுத்து சசிகலா இன்று மாலைக்குள் பெங்களூர் நீதிமன்ற நீதிபதியின் முன் சரண் அடைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More News

வெடி வெடிப்பதா? ஜெயலலிதாவின் ஆன்மா மன்னிக்காது. சாபம் விடும் சி.ஆர்.சரஸ்வதி

சுப்ரீம் கோர்ட் இன்று அளித்த சொத்துக்குவிப்பு வழக்கின் தீர்ப்பில் குற்றம் சாட்டப்பட்ட ஜெயலலிதா ,சசிகலா உள்பட 4 பேர்களுக்கும் தண்டனை வழங்கியுள்ளது

ஓபிஎஸ் வீட்டிற்கு சென்று ஆதரவு கொடுத்த பிரபல நடிகை

தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அவர்களுக்கு தொடர்ந்து ஆதரவு தேடி வந்து கொண்டிருக்கிறது.

கட்சியில் சேர்ந்த சில மணி நேரத்தில் பதவியை பெற்ற தினகரன். என்ன நடக்கிறது அதிமுகவில்?

அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா இன்று சிறைக்கு செல்வார் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் கட்சியின் முழு கட்டுப்பாடும் துணைச்செயலாளர் கைக்கே வந்துவிடும் என்பதால் டிடிவி தினகரன் கையில் கட்சியை ஓப்படைக்கவே அவர் மீண்டும் கட்சிக்குள் இணைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

ஒரே ராக்கெட்டில் 104 செயற்கைக்கோள்கள். இஸ்ரோவின் உலக சாதனை.

இஸ்ரோ எனப்படும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் ஒரே ராக்கெட்டில் 104 செயற்கைக்கோள்களை இணைத்து விண்ணில் வெற்றிகரமாக செலுத்தியுள்ளது

ஜெ. நீக்கிய இருவர் மீண்டும் அதிமுகவில். சிறைக்கு செல்லும் முன் சசிகலா அதிரடி

அதிமுக பொதுச்செயலாளர் சசிகலாவுக்கு உச்சநீதிமன்றம் நேற்று தண்டனையை உறுதி செய்த நிலையில் இன்று அவர் பெங்களூரில் சரண் அடைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது