கோவாவில் நம்பிக்கை வாக்கெடுப்பு எப்போது? சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவு
- IndiaGlitz, [Tuesday,March 14 2017]
சமீபத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற்ற கோவா மாநிலத்தில் ஆட்சி அமைக்க தேவையான 21 தொகுதிகளை எந்த கட்சியும் பெறவில்லை. காங்கிரஸ் 17 தொகுதிகளிலும் பாஜக 13 தொகுதிகளிலும் மட்டுமே வெற்றி பெற்றது. இருப்பினும் சிறு கட்சிகளின் ஆதரவுகள் தங்களுக்கு இருப்பதாக கூறி ஆட்சி அமைக்க பாஜக உரிமை கோரியது. பாஜக முதல்வர் வேட்பாளராக மத்திய பாதுகாப்பு அமைச்சராக இருந்த மனோகர் பாரிக்கர் தேர்வு செய்யப்பட்டார். அவரை கவர்னர் ஆட்சி அமைக்குமாரு அழைப்புவிடுத்தார்.
இந்நிலையில் கோவாவில் பா.ஜ.க ஆட்சியமைப்பதை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு இன்று அவசர வழக்காக விசாரணைக்கு வந்த போது, அதிக எம்.எல்.ஏ.க்கள் உள்ள காங்கிரஸ் கட்சி ஏன் ஆட்சியமைக்க உரிமை கோரவில்லை என்று கேள்வி எழுப்பியதும்.
மேலும் கோவா முதலமைச்சராக பதவியேற்க மனோகர் பாரிக்கருக்கு தடைவிதிக்க மறுப்பு தெரிவித்ததோடு கோவா சட்டமன்றத்தில் வரும் 16ஆம் தேதி நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தவும் உத்தரவிட்டுள்ளது.