சென்னை மெரீனாவில் போராட்டம்: சுப்ரீம் கோர்ட் முக்கிய உத்தரவு

  • IndiaGlitz, [Monday,December 03 2018]

கடந்த ஆண்டு ஜனவரி மாதம் சென்னை மெரீனாவில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக நடைபெற்ற போராட்டம், ஒருசில மாணவர்கள் மற்றும் இளைஞர்களால் சிறிய அளவில் ஆரம்பமானது. ஆனால் ஒருசில நாட்களில் இந்த போராட்டம் உலகையே திரும்பி பார்க்கும் வகையில் லட்சக்கணக்கானோர் கூடியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. எந்த அரசியல் கட்சியின் துணையில்லாமல் நடந்த இந்த போராட்டத்தின் எழுச்சி காரணமாக அப்போதைய முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் டெல்லி சென்று ஜல்லிக்கட்டு நடத்த சிறப்பு சட்டம் இயற்ற மத்திய அரசிடம் வலியுறுத்தி அதில் வெற்றியும் பெற்றார்.

ஆனால் அதன்பின்னர் மீண்டும் இதுபோன்ற போராட்டம் மெரீனாவில் நடந்துவிடக்கூடாது என்று காவல்துறையினர் தடை விதித்தனர். விவசாயிகள் பிரச்சனை உள்பட பல பிரச்சனைகளுக்கு மீண்டும் மெரீனாவில் போராட்டம் நடைபெற நடந்த முயற்சியினை காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர்

இந்த நிலையில் சென்னை மெரீனாவில் போராட்டம் நடத்த அனுமதிக்க வேண்டும் என்று தென்னிந்திய விவசாயிகள் நல சங்க தலைவர் அய்யாக்கண்ணு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரணை செய்த உச்சநீதிமன்றம் சென்னை மெரினா கடற்கரையில் போராட யாருக்கும் அனுமதி அளிக்க முடியாது என்று சற்றுமுன் உத்தரவு பிறப்பித்துள்ளது.

More News

விஜய்சேதுபதியின் சிலையை திறந்து வைத்த பழம்பெரும் இயக்குனர்

மக்கள் செல்வன் விஜய்சேதுபதி தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக உருவெடுத்துள்ள நிலையில் அவர் நடித்த 25வது படமான 'சீதக்காதி' திரைப்படம் வரும் 20ஆம் தேதி வெளிவரவுள்ளது.

'2.0' படத்தை சிம்பு எங்கே பார்த்தார் தெரியுமா?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த '2.0' திரைப்படம் கடந்த 29ஆம் தேதி உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியாகி பெரும் வரவேற்பை பெற்று வரும் நிலையில்

ரஜினியின் '2.0' வசூல் குறித்து ஏ.ஆர்.ரஹ்மானின் தகவல்

ரஜினியின் '2.0' குறித்த பல தகவல்களை அவ்வபோது தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவு செய்து வருவதை நாம் பார்த்து வருகிறோம்.

நயன்தாரா நாயகனின் அடுத்த படத்தில் ஐஸ்வர்யா தத்தா

பிக்பாஸ் 2 நிகழ்ச்சியின் பட்டத்தை நூலிழையில் தவறவிட்ட ஐஸ்வர்யா தத்தாவுக்கு கடந்த சில வாரத்தில் ஒருசில திரைப்படங்கள் ஒப்பந்தமாகி வருவது தெரிந்ததே.

நாசர் மகனை நெகிழ்ச்சி அடைய செய்த விஜய்

நடிகர் சங்க தலைவர் நாசரின் மகன் பைசல் கடந்த 2014ஆம் ஆண்டு கிழக்கு கடற்கரை சாலையில் ஏற்பட்ட சாலை விபத்து ஒன்றில் சிக்கி படுகாயம் அடைந்து மறுபிறவி எடுத்து பிழைத்தார்