நடிகை ஜெயப்ரதாவுக்கு 6 மாத சிறை தண்டனை.. மேல்முறையீட்டில் சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவு..!

  • IndiaGlitz, [Friday,December 15 2023]

தொழிலாளர்களின் இஎஸ்ஐ பணத்தை முறைகேடு செய்ததாக நடிகை ஜெயப்பிரதாவுக்கு ஆறு மாதம் சிறை தண்டனை வழங்கப்பட்ட நிலையில் இந்த தண்டனையை எதிர்த்து ஜெயப்பிரதா தரப்பில் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில் முக்கிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கமல்ஹாசனின் ’சலங்கை ஒலி’ ’நினைத்தாலே இனிக்கும்’ உள்பட பல தமிழ் படங்களிலும் ஏராளமான தெலுங்கு படங்களிலும் நடித்தவர் நடிகை ஜெயப்பிரதா. இவருக்கு சென்னை அண்ணாசாலையில் சொந்தமாக திரையரங்கம் இருந்த நிலையில் அந்த திரையரங்கில் பணிபுரிந்த தொழிலாளர்களிடம் இருந்து பிடிக்கப்பட்ட இஎஸ்ஐ தொகையை அரசு காப்பீட்டு கழகத்தில் செலுத்தவில்லை என குற்றச்சாட்டு எழுந்தது.

இது குறித்து தொடரப்பட்ட வழக்கில் ஜெயப்பிரதா உள்பட மூன்று பேருக்கு ஆறு மாதம் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்த நிலையில் தண்டனையை நிறுத்தி வைக்க நீதிமன்றம் மறுத்துவிட்டது.

இதனை அடுத்து ஜெயப்பிரதா தரப்பு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தது. இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்த நிலையில் சிறை தண்டனைக்காக ஜெயப்பிரதா சரணடைய வேண்டும் என்ற விதியில் இருந்து விலக்கு அளித்து உத்தரவிடப்பட்டது. மேலும் தண்டனையை நிறுத்தி வைத்து உத்தரவிட்டதோடு இஎஸ்ஐக்கு நோட்டீஸ் அனுப்பவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

More News

நிக்சன் - ஐஷு சீக்ரெட்டை உடைத்த மாயா.. நிக்சனின் ரியாக்சன் என்ன?

பிக் பாஸ் நிகழ்ச்சி 7வது சீசன் தொடங்கி 75 நாட்கள் இன்று நிறைவு பெற்றதை அடுத்து, முதல் ப்ரோமோவில் அனைத்து போட்டியாளர்களும் ஸ்வீட் எடுத்து கொண்டாடியதை பார்த்தோம்

விஜய்யின் 'புலி'க்கு பின் சிம்புதேவனின் அடுத்த படம்.. டைட்டிலுடன் ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ்..!

தளபதி விஜய் நடித்த 'புலி' திரைப்படத்தை இயக்கிய இயக்குனர் சிம்புதேவன்  8 ஆண்டுகளுக்கு பின் இயக்கிய திரைப்படத்தின் டைட்டிலுடன் கூடிய ஃபர்ஸ்ட் போஸ்டர் வெளியாகி உள்ளது.  

இந்த வாரம் ஓடிடியில்  'கிடா' உள்பட 3 தமிழ் படங்கள்.. முழு விவரங்கள்..!

ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை திரையரங்குகளில் புதிய திரைப்படங்கள் வெளியாகி வரும் நிலையில் இன்று 'ஃபைட் கிளப்' உள்பட ஒரு சில படங்கள் வெளியாகி உள்ளன.

போடு ஆட்டம் போடு.. திடீரென ஸ்வீட் உடன் கொண்டாடும் போட்டியாளர்கள்: என்ன விசேஷம்?

பிக் பாஸ் நிகழ்ச்சி கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக நடைபெற்று வரும் நிலையில் இன்று முதல் ப்ரோமோ வெளியாகியுள்ள நிலையில் அதில் அனைத்து போட்டியாளர்களும் ஆட்டம் பாட்டத்துடன்

'அயலான்' உள்பட 2 படங்களை வெளியிட நீதிமன்றம் தடை.. என்ன காரணம்?

சிவகார்த்திகேயன் நடித்த  'அயலான்' திரைப்படம் வரும் பொங்கல் தினத்தில் வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது. அதேபோல் நடித்த வைபவ் நடித்த 'ஆலம்பனா' என்ற திரைப்படம்