திரை அரங்குகளில் தேசிய கீதம். சுப்ரீம் கோர்ட் முக்கிய உத்தரவு
Send us your feedback to audioarticles@vaarta.com
இந்தியா முழுவதிலும் உள்ள திரையரங்குகளில் தற்போது புகை பிடிப்பதன் தீங்கு குறித்த விழிப்புணர்வு விளம்பரம் திரையிடப்பட்டு வரும் நிலையில் இனி அனைத்து திரையரங்குகளிலும் தேசிய கீதம் இசைப்பதையும் கட்டாயமாக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்த வழக்கு ஒன்று கடந்த சில நாட்களாக நடைபெற்று வந்த நிலையில் இன்று இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது நாடு முழுவதும் உள்ள திரையரங்குகளில் தேசிய கீதத்தை திரைப்படம் தொடங்குவதற்கு முன் இசைக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
அதுமட்டுமின்றி தேசிய கீதம் ஒலிக்கும்போது திரையில் தேசிய கொடியை காட்டவேண்டும் என்றும் தேசிய கீதம் ஒலிக்கும்போது திரையரங்கில் உள்ள பார்வையாளர்கள் அனைவரும் எழுந்து நின்று மரியாதை செலுத்த வேண்டும் என்றும் அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
தேசிய கீதம் ஒலிக்கப்படுவதில் வணிகரீதியான ஆதாயம் எதுவும் தேடக்கூடாது என்று திரையரங்க நிர்வாகத்திற்கு உத்தரவிட்டுள்ள நீதிமன்றம் இந்த உத்தரவை உடனே அமல்படுத்த வேண்டும் என்று மத்திய அரசுக்கு அறிவுறுத்தியுள்ளது.
சுப்ரீம் கோர்ட்டின் இந்த உத்தரவை அமல்படுத்த மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளதொடு இதுகுறித்து மாநில அரசுகளுக்கு உடனடியாக சுற்றறிக்கை அனுப்பப்படும் என்று ஒப்புதல் அளித்துள்ளது.
ஒவ்வொரு மாநில அரசுகளுக்கும் மத்திய அரசிடம் இருந்து சுற்றறிக்கை வந்த பின்னர் திரையரங்குகளில் இனி தேசிய கீதம் ஒலிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout