ரஜினியிடம் என்ன இருக்கிறது? முன்னாள் சுப்ரீம் கோர்ட் நீதிபதி ஆவேசம்
Send us your feedback to audioarticles@vaarta.com
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ரசிகர்களை இன்று மூன்றாவது நாளாக சந்தித்து வருவது அனைவரும் அறிந்ததே. முதல் நாள் சந்திப்பின்போது ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவது குறித்து பரபரப்பான கருத்து ஒன்றை தெரிவித்தார். அவருடைய கருத்து தமிழக அரசியலில் பெரும்புயலை கிளப்பிவிட்டது. அவர் அரசியலுக்கு வருவாரா? மாட்டாரா? என்பது குறித்து ரசிகர்களிடையே மட்டுமின்றி அரசியல்வாதிகளும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் ரஜினியின் அரசியல் கருத்து குறித்து முன்னாள் சுப்ரீம் கோர்ட் நீதிபதி மார்க்கண்டேய கட்ஜூ தனது சமூக வலைத்தளத்தில் தனது கருத்தை பதிவு செய்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது:
தென்னிந்தியர்கள் மீது நான் மிகுந்த மரியாதை வைத்துள்ளேன். ஆனால், சினிமா நட்சத்திரங்கள் மீது முட்டாள்தனமான பக்தி வைத்திருப்பதை என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை. அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் நான் படித்த சமயத்தில் ஒருநாள் தமிழ் நண்பர்களுடன் சேர்ந்து சிவாஜி கணேசன் நடித்த படத்தை பார்க்கச் சென்றேன். அப்போது, படத்தின் தொடக்கத்தில் சிவாஜியின் காலை மட்டும் காட்டும்போது, ரசிகர்கள் விசில் அடித்து ஆரவாரம் செய்தனர்.
தற்போது ஏராளமான தென்னிந்தியர்கள் ரஜினிகாந்த் மீது பைத்தியமாக உள்ளனர். அவர் அரசியலுக்கு வந்து முதலமைச்சர் ஆக வேண்டும் என்றுகூட சிலர் கூறுகிறார்கள்.
ஆனால் ரஜினியிடம் என்ன இருக்கிறது? வறுமை, வேலையின்மை, ஊட்டச்சத்து குறைபாடு, சுகாதார குறைபாடு, விவசாயிகளின் துயரம் உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு அவரிடம் தீர்வுகள் இருக்கின்றனவா? அவரிடம் ஒன்றும் இல்லை என்று நான் நினைக்கிறேன். பிறகு ஏன் அவர் அரசியலுக்கு வரவேண்டும் என மக்கள் விரும்புகிறார்கள்? அமிதாப் பச்சன் போன்று ரஜினிகாந்த் தலையிலும் எதுவும் இல்லை' இவ்வாறு மார்க்கண்டேய கட்ஜூ தெரிவித்துள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout