கருணைக்கொலை குறித்து சுப்ரீம் கோர்ட்டின் அதிரடி தீர்ப்பு
- IndiaGlitz, [Friday,March 09 2018]
தீராத நோயால் பாதிக்கப்பட்டு துன்பப்படும் மனிதர்களை நிபந்தனையுடன் கருணைக்கொலை செய்ய அனுமதித்து சுப்ரீம் கோர்ட் இன்று தீர்ப்பு அளித்துள்ளது
கருணைக்கொலை செய்வது குறித்த வழக்கு ஒன்று கடந்த சில மாதங்களாக சுப்ரீம் கோர்ட்டில் நடந்து வந்த நிலையில் சற்றுமுன் இந்த வழக்கின் தீர்ப்பு அளிக்கப்பட்டது. சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு வழங்கிய இந்த தீர்ப்பில், 'தீராத நோயால் பாதிக்கப்பட்டவர்களை கருணை கொலை செய்யலாம் என்று அனுமதி அளித்துள்ளது.
கண்ணியத்துடன் இறப்பதற்கு மனிதர்களுக்கு உரிமை உண்டு என்று கூறிய சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள், தீராத நோயுள்ளவர்களைச் சில விதிகளுக்குட்பட்டு மரணிக்க அனுமதிக்கலாம் என்றும் அவ்வாறு கருணைக்கொலை செய்யும்போது நோயாளிகளின் மருத்துவ உபகரணங்களை அகற்றி உயிரிழக்க வைக்கலாம் என்றும் நீதிபதிகள் தீர்ப்பளித்துள்ளனர்.
இந்த தீர்ப்பு கருணைக்கொலை குறித்து புதிய சட்டம் நிறைவேற்றப்படும் வரை அமலில் இருக்கும் என்றும் நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் தெரிவித்தனர்.