ஸ்டெர்லைட் திறப்புக்கு அனுமதி… தமிழகத்திற்கு முன்னுரிமை இல்லை- உச்சநீதிமன்றம்!

  • IndiaGlitz, [Tuesday,April 27 2021]

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை ஆக்சிஜன் உற்பத்திக்காக திறக்க அனுமதி அளிக்கிறோம். எனவே ஆக்சிஜன் தயாரிப்புக்கு தேவையான மின்சாரத்தை தமிழக அரசு உடனடியாக வழங்க வேண்டும். மேலும் உற்பத்தி செய்யப்படும் ஆக்சிஜனை மத்திய தொகுப்புக்கு மட்டுமே வழங்க வேண்டும். இதில் தமிழ்நாட்டுக்கு முன்னுரிமை வழங்க இயலாது. மாநிலங்களுக்குத் தேவையான ஆக்சிஜன் அளவை மத்திய அரசே முடிவு செய்யும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வெளியிட்டு உள்ளது.

முன்னதாக தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையால் சுற்றுச்சூழல் மாசுபாடு ஏற்படுகிறது எனக்கூறி அந்த ஆலை மூடப்பட்டது. தற்போது கொரோனா நோய்த்தொற்றின் காரணமாக நாடு முழுவதும் ஆக்சிஜன் பற்றாக்குறை நிலவுகிறது. இந்தப் பற்றாக்குறையை நாங்கள் போக்குகிறோம். ஆலையை திறக்க அனுமதி வேண்டும் என்றொரு கோரிக்கை மனுவை வேதாந்த நிறுவனம் கடந்த சில தினங்களுக்கு முன்பு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்தது.

இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஆக்சிஜன் தயாரிப்புக்காக ஆலையை திறக்கலாமா? எனக் கருத்துக் கணிப்பு கேட்டது. இந்தக் கருத்துக் கணிப்பில் ஆலையைத் திறந்தால் மீண்டும் தமிழகத்தில் நெருக்கடி நிலைமை ஏற்பட்டு விடும் எனப் பதில் கூறியிருந்தது. இந்த பதிலை அடுத்து ஏன் தமிழக அரசே ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜனை தயாரிக்க கூடாது எனக் கேள்வி எழுப்பியது.

ஆனால் இந்த முடிவை எதிர்ப்பார்க்காத வேதாந்தா நிறுவனம் ஆக்சிஜன் தயாரிப்புக்கு தேர்ந்த ஊழியர்கள் வேண்டும். அதனால் தமிழக அரசை ஆக்சிஜன் தயாரிப்புக்கு அனுமதிக்க முடியாது எனக் கூடுதல் மனுவை நேற்று உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்து இருந்தது. இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று கொண்டு இருக்கும்போதே நேற்று தமிழக அரசு அனைத்துக் கட்சித் தலைமையிலான அவசரக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்தது. அந்தக் கூட்டத்தில் வேதாந்த நிறுவனம் கூறுவதுபோல 4 மாதத்திற்கு மட்டும் ஆக்சிஜன் தயாரிப்புக்காக ஸ்டெர்லை ஆலை திறப்புக்கு அனுமதி வழங்கியது.

இப்படி தமிழக அரசு ஆலை திறப்புக்கு ஒப்புதல் அளித்து அறிவிப்பு வெளியிட்டு உள்ள நிலையில் தற்போது உச்சநீதிமன்றம் ஆக்சிஜன் தயாரிப்புக்காக ஆலை திறப்புக்கு அனுமதி அளித்து உள்ளது. மேலும் இந்த ஆலையில் உற்பத்தி செய்யப்படும் ஆக்சிஜனை மத்திய தொகுப்புக்கு மட்டுமே வழங்க வேண்டும் என்றும் இதில் தமிழக அரசுக்கு முன்னுரிமை கொடுக்க முடியாது என்றும் தீர்ப்பு வழங்கி உள்ளது.

More News

ஹாலிவுட்டையே ஆட்டிப்படைத்த சில்வஸ்டர் ஸ்டோலன்… வெற்றி பயணத்தின் ஆடியோ வடிவம்!

“ராக்கி“ என்ற ஹாலிவுட் சினிமாவை விரும்பாத ரசிகர்களே இருக்க முடியாது. ஆனால் இந்த சினிமாவிற்கு பின்னால் ஒரு கதையாசிரியர்,

பொது முடக்கம் குறித்து முக்கிய அறிவிப்புகளை வெளியிட்ட மத்திய அரசு...!

இந்தியாவில் பொது முடக்கத்தை அமல்படுத்தினால், என்னென்ன நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்று மத்திய அரசு வெளியிட்டுள்ளது.

கோவை சரளா திருமணம் செய்யாததற்கு இப்படி ஒரு காரணமா? ஆச்சரியத்தில் ரசிகர்கள்!

தமிழ் திரையுலகின் காமெடி நடிகைகளில் ஒருவர் கோவை சரளா என்பதும் கடந்த பல ஆண்டுகளாக இவர் தமிழ் தெலுங்கு மொழிகளில் சுமார் 250 படங்களுக்கு மேல் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது

செடிகளை வைத்து கண்ணாடி கூண்டு முகக்கவசம்… எதற்கு இந்த முயற்சி?

பெல்ஜியத்தைச் சேர்ந்த ஒருவர் உண்மையான தாவரச் செடிகளை வைத்து கண்ணாடியால் வடிவமைக்கப்பட்ட முகக்கவசத்தை அணிந்து கொண்டு பொது மக்கள் மத்தியில் நடமாடி வருகிறார்.

இன்றோடு எல்லாவற்றையும் விட்டுவிடுகிறேன்: தாமிராவின் கடைசி ஃபேஸ்புக் பதிவு!

பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் தயாரிப்பில் இயக்குனர் சிகரம் பாலசந்தர், இயக்குனர் இமயம் பாரதிராஜா உள்பட பலர் நடித்த 'ரெட்டைசுழி' என்ற திரைப்படத்தை இயக்கிவரும் அதன் பின்னர் சமுத்திரக்கனி,