கொரோனா நேரத்தில் வேலை இழப்பா? நிவாரணம் வாங்குவது குறித்து விளக்கும் வீடியோ!
Send us your feedback to audioarticles@vaarta.com
கடந்த 2019 டிசம்பர் மாதம் ஆரம்பித்த கொரோனா நோய்த் தொற்றினால் பல லட்சக் கணக்கான மக்கள் உலகம் முழுவதும் தங்களது வேலையை இழந்து தவித்து வருகின்றனர். மேலும் கொரோனா நேரத்தில் போடப்பட்ட ஊரடங்கினாலும் பல பெரிய நிறுவனங்கள் தங்களது வருவாயை இழந்து இருக்கின்றன. மேலும் சிறு குறு வணிகர்களும் தங்களது வாழ்வாரத்தை இழந்து தவிக்கும் சூழல் ஏற்பட்டு இருக்கிறது. இந்நிலையில் அன்றாடம் கூலிகளின் நிலை? எல்லாவற்றையும் விட பெரிய கேள்விக்குறியாக மாறி இருக்கிறது.
இதுபோன்ற சூழலில் தொழிலாளர்களுக்குப் பாதுகாப்பு அளிக்கும் சட்டம் பற்றிய யாரும் கேள்வி எழுப்பவே இல்லை? அதை ஒவ்வொரு அரசாங்கமும் முறைப்படுத்திட வேண்டும் என்ற வேண்டுகோள் உலகம் முழுவதும் இருந்து வருகிறது. மேலும் சாதாரண சம்பளத்தில் இருந்து சேமிக்கப்படும் பிஃஎப் போன்ற விஷயங்களும் இதுபோன்ற பேரிடர் காலத்தில் மக்களுக்கு கைக்கொடுக்க வேண்டும். இதனால் பேரிடர் காலத்தில் நிவாரணம் பெறும் வழிமுறைகளைப் பற்றி மக்களுக்குத் தெரியப்படுத்த வேண்டும் என்ற கருத்தும் பொதுவாக இருந்து வருகிறது.
இந்நிலையில் கொரோனா காரணமாக தங்களது வேலையை இழந்து தவிக்கும் தொழிலாளர்கள் பேரிடர் காலத்தில் நிவாரணம் பெற முடியுமா? அவர்களுக்கு ESI எனப்படும் காப்பீட்டு திட்டம் கைக்கொடுக்குமா? இந்த ESI காப்பீட்டுத் திட்டத்தில் இருந்து எப்படி பேரிடர் காலத்தில் அதுவும் வேலையை இழந்த தொழிலாளர்கள் நிவாரணத்தைப் பெற்றுக் கொள்வது? என்பது போன்ற சந்தேகங்களுக்கு பதில் அளித்து உச்சநீதிமன்ற வழக்கறிஞர் திரு.கிருஷ்ணமூர்த்தி பிரத்யேக நேர்காணல் வழங்கி உள்ளார். இந்த நேர்காணல் வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் தனிக்கவனம் பெற்று இருக்கிறது.
மேலும் சாதாரணமாகவே இருக்கும் தொழிலாளர் சட்டங்கள் கொரோனா நேரத்தில் நிவாரணம் பெறவோ அல்லது வேலைக்கான உத்தரவாதத்திற்கோ பயன்படுமா? என்ற சந்தேகமும் இருந்து வருகிறது. இதுபோன்ற கேள்விகளுக்கும் வழக்கறிஞர் கிருஷ்ணமூர்த்தி விளக்கம் அளித்து உள்ளார். இந்த வீடியோ வேலையை இழந்து வீட்டில் இருக்கும் பல இளைஞர்களுக்கு உதவியாக அமையும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments