சசிகலா முதல்வராக தடை கோரிய வழக்கு. சுப்ரீம் கோர்ட் முக்கிய முடிவு

  • IndiaGlitz, [Thursday,February 09 2017]

தமிழகத்தில் நடைபெற்று வரும் பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் ஒருபக்கம் முதல்வர் ஓபிஎஸ் அவர்களுக்கு ஆதரவு அதிகரித்து கொண்டே வரும் நிலையில் இன்னொரு பக்கம் சசிகலாவுக்கு அதரிச்சி தரும் செய்திகள் தொடர்ந்து வந்துகொண்டே உள்ளது.
அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன், மீன்வளத்துறை அமைச்சர் ஜெயகுமார் ஆகியோர் ஓபிஎஸ் அவர்களுக்கு ஆதரவு கொடுத்த அதிர்ச்சியையே இன்னும் தாங்க முடியாத நிலையில் உள்ள சசிகலாவுக்கு தற்போது சுப்ரீம் கோர்ட் எடுத்துள்ள முக்கிய முடிவு ஒன்று மேலும் அதிர்ச்சியை அளித்துள்ளது
சசிகலா முதல்வராக பொறுப்பேற்க தடை கோரி சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு ஒன்று பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க சுப்ரீம் கோர்ட் ஒப்புக்கொண்டு நாளை இந்த வழக்கை விசாரிக்க சம்மதம் தெரிவித்துள்ளது.
ஏற்கனவே சுப்ரீம் கோர்ட் சசிகலா சம்பந்தப்பட்ட சொத்துக்குவிப்பு வழக்கின் தீர்ப்பை நாளை அல்லது திங்கள் அன்று வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படும் சூழ்நிலையில் இந்த வழக்கும் நாளை விசாரணணக்கு வரவுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

More News

சென்னை வந்தார் கவர்னர். சட்ட வல்லுனர்களுடன் ஆலோசனை

தமிழக பொறுப்பு கவர்னர் வித்யாசாகர் ராவ் சற்றுமுன் சென்னை வந்து இறங்கினார்.

பரபரப்பான சூழ்நிலையில் சசிகலாவை முந்திவிட்டார் ஓபிஎஸ்

தமிழக அரசியல் களம் கடந்த இரண்டு நாட்களாக பெரும் பரபரப்பில் உள்ள நிலையில் தமிழக பொருப்பு ஆளுனர் வித்யாசாகர் ராவ் இன்னும் சற்று நேரத்தில் சென்னை வருகிறார்.

மதுசூதனை தொடர்ந்து இன்னொரு முக்கிய அமைச்சரும் ஆதரவு. ஓபிஎஸ் அணி உற்சாகம்

அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் அவர்களின் வரவால் முதல்வர் ஓபிஎஸ் அணியின் கை ஓங்கியுள்ள..

திடீர் திருப்பம். ஓபிஎஸ்-இன் போர்ப் படையில் இணைந்த மதுசூதனன்.

அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் அவர்கள் முதல்வர் ஓபிஎஸ் இல்லத்திற்கு வருகை தந்து தனது முழு ஆதரவை அளித்துள்ளது தமிழக அரசியலில் பெரும் திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஓபிஎஸ்-ஐ சந்தித்த ஜெயலலிதாவின் உயிர்த்தோழி

தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அவர்களை மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உயிர்த்தோழியும், தமிழ்நாடு இசை பல்கலைக்கழக துணைவேந்தருமான வீணை காயத்ரி சற்று முன் சந்தித்து பேசினார்