ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் குறித்த வழக்கில் சுப்ரீம் கோர்ட் முக்கிய உத்தரவு

  • IndiaGlitz, [Thursday,January 05 2017]

தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா மறைந்து இன்றுடன் சரியாக ஒரு மாதம் ஆகியுள்ள நிலையில், அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும், இதுகுறித்து சிபிஐ விசாரணை செய்து உண்மையை வெளிக்கொண்டு வரவேண்டும் என்றும் மாநிலங்களவை உறுப்பினர் சசிகலா புஷ்பா சுப்ரீம் கோர்ட்டில் மனுஒன்றை தாக்கல் செய்திருந்தார். மேலும் தெலுங்கு யுவா சங்கம் என்ற அமைப்பும் இதுகுறித்து தனியாக ஒரு மனு தாக்கல் செய்திருந்தது.
இந்நிலையில் சற்று முன் சுப்ரீம் கோர்ட்டில் இந்த மனுக்கள் விசாரணைக்கு வந்தது. இந்த மனுக்களை விசாரணை செய்த சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் ஜெயலலிதா மரணம் குறித்து சிபிஐ விசாரணை கோரும் வழக்கு சென்னை ஐகோர்ட்டில் நடந்து வருகிறது. இந்த வழக்கை அந்த நீதிமன்றமே விசாரிக்கட்டும். சுப்ரீம் கோர்ட்டில் விசாரிக்க இந்த மனுவில் எந்த முகாந்திரமும் இல்லை என்று கூறி சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் பாலி நாரிமன் மற்றும் பினாக்கி சந்திரகோஷ் ஆகியோர் இந்த மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
இந்நிலையில் ஜெயலலிதா மரணத்தில் மர்ம இருப்பதாக சென்னை ஐகோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கு விசாரணை விரைவில் நடைபெறவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

More News

ஒருநாள், டி-20 அணிகளின் கேப்டன் பொறுப்பில் இருந்து விலகினார் தோனி

இந்திய கிரிக்கெட் அணியின் 'தல' என்று கூறப்படும் தோனி கடந்த 2014ஆம் ஆண்டு டெஸ்ட் கிரிக்கெட் அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து விலகிய நிலையில் தற்போது ஒருநாள் போட்டிகள் மற்றும் டி-20 போட்டிகளிலும் கேப்டன் பொறுப்பில் இருந்து விலகியுள்ளார்.

விஜய் என்ன நினைப்பாரோ என்று பயந்தேன்: 'பைரவா' எடிட்டர்

இளையதளபதி விஜய் நடித்த 'பைரவா' திரைப்படம் ரிலீஸ் ஆக இன்னும் ஒருசில நாட்களே உள்ள நிலையில் விஜய் ரசிகர்கள்...

ஜல்லிக்கட்டு தடைக்கு யார் காரணம்? கூகுளில் தேடிப்பாருங்கள். மு.க.ஸ்டாலினை விளாசிய சசிகலா

ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம் பொங்கல் திருநாள் நெருங்கும்போது, 'ஜல்லிக்கட்டு' அரசியல் நடத்துவது கிட்டத்தட்ட அனைத்து கட்சிகளுக்கும் ஒரு வழக்கமாகி வருகிறது...

5 மாநில சட்டசபை தேர்தல் தேதி. தேர்தல் ஆணையர் அறிவிப்பு

கிட்டத்தட்ட ஒரு மினி பொதுத்தேர்தல் போல நடைபெறவிருக்கும் ஐந்து மாநிலங்களின் சட்டமன்ற தேர்தல் தேதி குறித்த அறிவிப்பை சற்று முன்னர் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது...

தயாரிப்பாளர் சங்கத்திடம் வருத்தம் தெரிவித்தார் விஷால். சஸ்பெண்ட் ரத்தாகுமா?

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் செயலாளரும் நடிகருமான விஷால் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தயாரிப்பாளர் சங்கம்...