ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் குறித்த வழக்கில் சுப்ரீம் கோர்ட் முக்கிய உத்தரவு

  • IndiaGlitz, [Thursday,January 05 2017]

தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா மறைந்து இன்றுடன் சரியாக ஒரு மாதம் ஆகியுள்ள நிலையில், அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும், இதுகுறித்து சிபிஐ விசாரணை செய்து உண்மையை வெளிக்கொண்டு வரவேண்டும் என்றும் மாநிலங்களவை உறுப்பினர் சசிகலா புஷ்பா சுப்ரீம் கோர்ட்டில் மனுஒன்றை தாக்கல் செய்திருந்தார். மேலும் தெலுங்கு யுவா சங்கம் என்ற அமைப்பும் இதுகுறித்து தனியாக ஒரு மனு தாக்கல் செய்திருந்தது.
இந்நிலையில் சற்று முன் சுப்ரீம் கோர்ட்டில் இந்த மனுக்கள் விசாரணைக்கு வந்தது. இந்த மனுக்களை விசாரணை செய்த சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் ஜெயலலிதா மரணம் குறித்து சிபிஐ விசாரணை கோரும் வழக்கு சென்னை ஐகோர்ட்டில் நடந்து வருகிறது. இந்த வழக்கை அந்த நீதிமன்றமே விசாரிக்கட்டும். சுப்ரீம் கோர்ட்டில் விசாரிக்க இந்த மனுவில் எந்த முகாந்திரமும் இல்லை என்று கூறி சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் பாலி நாரிமன் மற்றும் பினாக்கி சந்திரகோஷ் ஆகியோர் இந்த மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
இந்நிலையில் ஜெயலலிதா மரணத்தில் மர்ம இருப்பதாக சென்னை ஐகோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கு விசாரணை விரைவில் நடைபெறவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.