வேலுமணிக்கு ஓட்டுகள் திரட்ட ஆதரவாளர் செய்தது..! ஆச்சரியத்தில் கோவை மக்கள்...!
Send us your feedback to audioarticles@vaarta.com
அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு ஆதரவு திரட்டும் பொருட்டு, வேட்பாளர் செய்த காரியம் கோவை மக்களை ஆச்சரியத்தில் ஈடுபடுத்தியுள்ளது.
நடக்கவிருக்கும் சட்டமன்ற தேர்தலுக்கு குறைந்த நாட்கள் மட்டுமே உள்ளதால், அரசியல் கட்சியினர் சூடுபிடிக்க பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் அதிமுக அரசு மற்றும் தமிழக உள்ளாட்சி துறை அமைச்சரின் சாதனைகளை எடுத்து விளக்கும் விதத்தில், குனியமுத்தூரை சேர்ந்த யு.எம்.டி.ராஜா கண்களை கட்டிக்கொண்டு அமைச்சருக்கு வாக்குகள் சேகரித்துள்ளார். இந்த இளைஞர் கருப்பு துணியால் கண்களைக்கட்டிக்கொண்டு, இருசக்கர வாகனத்தில் பிரச்சாரம் செய்வது கோவை மக்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதுபற்றி அவர் செய்தியாளர்களிடம் கூறியிருப்பதாவது,
சென்ற பத்து வருடங்களுக்கு முன்பு கோவையிலுள்ள சாலைகளில் கண் திறந்தபடி கூட வாகனங்களை ஓட்ட முடியாது. ஆனால் எஸ்.பி.வேலுமணி அவர்கள் உள்ளாட்சி துறை அமைச்சராக பொறுப்பேற்ற பின் அனைத்து சாலைகளும் சரிசெய்யப்பட்டது. பின் தமிழகம் முழுவதும் உள்ள கட்டமைப்புகள் சரிசெய்யப்பட்டன. இவரின் சாதனைகளை மக்களிடம் எடுத்துச்செல்லும் பொருட்டுதான், கண்களை கட்டிக்கொண்டு வாகனத்தை ஓட்டி பிரச்சாரங்களை மேற்கொண்டேன்" என அவர் கூறினார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout