வேலுமணிக்கு ஓட்டுகள் திரட்ட ஆதரவாளர் செய்தது..! ஆச்சரியத்தில் கோவை மக்கள்...!

  • IndiaGlitz, [Friday,March 26 2021]

அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு ஆதரவு திரட்டும் பொருட்டு, வேட்பாளர் செய்த காரியம் கோவை மக்களை ஆச்சரியத்தில் ஈடுபடுத்தியுள்ளது.

நடக்கவிருக்கும் சட்டமன்ற தேர்தலுக்கு குறைந்த நாட்கள் மட்டுமே உள்ளதால், அரசியல் கட்சியினர் சூடுபிடிக்க பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் அதிமுக அரசு மற்றும் தமிழக உள்ளாட்சி துறை அமைச்சரின் சாதனைகளை எடுத்து விளக்கும் விதத்தில், குனியமுத்தூரை சேர்ந்த யு.எம்.டி.ராஜா கண்களை கட்டிக்கொண்டு அமைச்சருக்கு வாக்குகள் சேகரித்துள்ளார். இந்த இளைஞர் கருப்பு துணியால் கண்களைக்கட்டிக்கொண்டு, இருசக்கர வாகனத்தில் பிரச்சாரம் செய்வது கோவை மக்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதுபற்றி அவர் செய்தியாளர்களிடம் கூறியிருப்பதாவது,

சென்ற பத்து வருடங்களுக்கு முன்பு கோவையிலுள்ள சாலைகளில் கண் திறந்தபடி கூட வாகனங்களை ஓட்ட முடியாது. ஆனால் எஸ்.பி.வேலுமணி அவர்கள் உள்ளாட்சி துறை அமைச்சராக பொறுப்பேற்ற பின் அனைத்து சாலைகளும் சரிசெய்யப்பட்டது. பின் தமிழகம் முழுவதும் உள்ள கட்டமைப்புகள் சரிசெய்யப்பட்டன. இவரின் சாதனைகளை மக்களிடம் எடுத்துச்செல்லும் பொருட்டுதான், கண்களை கட்டிக்கொண்டு வாகனத்தை ஓட்டி பிரச்சாரங்களை மேற்கொண்டேன் என அவர் கூறினார்.

More News

அதிமுக ஆட்சிக்கு வந்தபிறகுதான் ஸ்டாலினால் மதுரையில் கால் வைக்க முடிகிறது- முதல்வர் பழனிசாமி கருத்து!

அதிமுக ஆட்சிக்கு வந்த பிறகுதான் மு.க.ஸ்டாலினே மதுரைக்குள் வர முடிகிறது என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தேர்தல் பிரச்சாரத்தின்போது தெரிவித்து உள்ளார்.

'அசுரன்' மஞ்சுவாரியரா இவர்?  டாப் நடிகைகளுக்கு சவால் விடும் புகைப்படம்!

தனுஷ் மற்றும் வெற்றிமாறன் ஆகிய இருவருக்கும் தேசிய விருதைப் பெற்றுக் கொடுத்த 'அசுரன்' திரைப்படத்தை இருவருமே இன்னும் பல ஆண்டுகளுக்கு மறக்கமாட்டார்கள்.

எஸ்.எஸ்.ராஜமெளலியின் 'ஆர்.ஆர்.ஆர்' படத்தின் அட்டகாசமான போஸ்டர்!

பிரமாண்ட இயக்குனர் எஸ்எஸ் ராஜமவுலி இயக்கத்தில் உருவாகிவரும் 'ஆர்.ஆர்.ஆர்' என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிவடையும் நிலையில் உள்ளது

பாதுகாப்பு வழங்கும் போலீசுக்கே அச்சுறுத்தலா? எதிர்க்கட்சி குறித்து தமிழக முதல்வர் காட்டம்!

தமிழகச் சட்டப் பேரவை தேர்தலுக்கான பிரச்சாரத்தில் அனைத்துக்  கட்சிகளும் தற்போது தீவிரம் காட்டி வருகின்றன.

மீண்டும் அதிமுக ஆட்சி: 4 நிறுவனங்களின் கருத்துக்கணிப்புகள்

தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் இந்த தேர்தலில் 5 முனை போட்டி ஏற்பட்டாலும் உண்மையான போட்டி அதிமுக மற்றும் திமுக கூட்டணிக்கு இடையே