இலங்கை தமிழர்களுக்கு ரஜினிகாந்த் வெளியிட்ட முக்கிய அறிக்கை
Send us your feedback to audioarticles@vaarta.com
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சமீபத்தில் ஈழத்தமிழர்களுக்கு வீடு வழங்கும் விழாவில் கலந்து கொள்வதாக இருந்தது. ஆனால் தமிழக அரசியல்வாதிகள் ஒருசிலரின் வேண்டுகோளுக்கு இணங்க இந்த விழாவில் கலந்து கொள்ளும் திட்டத்தை ரஜினிகாந்த் ரத்து செய்தார்.
இதனால் தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பரபரப்பு ஏற்பட்ட நிலையில் இலங்கை வாழ் தமிழர்களும் ரஜினியின் இலங்கை பயண ரத்துக்கு வருத்தம் தெரிவித்தனர். ரஜினியை இலங்கைக்கு வரவிடாமல் தடுத்த அரசியல்வாதிகளை அவர்கள் கடுமையாக விமர்சனம் செய்தனர். குறிப்பாக யாழ் பகுதியில் போஸ்டர்கள் ஒட்டி போராட்டமும் நடைபெற்றதாக தகவல்கள் வந்தது
இந்நிலையில் ஈழத்தமிழர்கள் தன் மீது வைத்துள்ள அன்புக்கு நன்றி தெரிவித்து அறிக்கை ஒன்றை ரஜினிகாந்த் நெற்று வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது: 'நீங்கள் என்மேல் வைத்திருக்கும் அன்பை ஊடகங்கள் மூலம் அறிந்தேன். நன்றி சொல்ல என்னிடம் வார்த்தைகள் இல்லை. நல்லதையே நினைப்போம், நல்லதே நடக்கும். நேரம் கூடிவரும்போது சந்திப்போம். நீங்கள் நலமுடன் வாழ இறைவனை வேண்டுகிறேன்' என்று கூறியுள்ளார்.
இந்த கடிதத்தில் நேரம் கூடி வரும்போது சந்திப்போம் என்று ரஜினிகாந்த் கூறியுள்ளதால் மிகவிரைவில் அவர் இலங்கை செல்லக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Contact at support@indiaglitz.com