ரசிகர்களுக்கு சூப்பர் ஸ்டார் ரஜினியின் நன்றிக் கடிதம்

  • IndiaGlitz, [Tuesday,July 26 2016]
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'கபாலி' திரைப்படம் கடந்த வெள்ளியன்று வெளியாகி உலகம் முழுவதும் பல வசூல் சாதனைகளை செய்து வருகிறது. இந்த படத்தை வெற்றிப்படமாக்கிய தனது ரசிகர்களுக்கு ரஜினிகாந்த் நன்றி தெரிவித்து கடிதம் ஒன்றை தனது கைப்பட எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது:
என்னை வாழ வைக்கும் தமிழக மக்களாகிய அனைவருக்கும் என்னுடைய வணக்கங்கள். 'லைக்கா' தயாரிப்பில் திரு.சங்கரின் இயக்கத்தில் மிக பிரமாண்டமாக உருவாகும் '2.0' மற்றும் நண்பர் தாணு அவர்களின் தயாரிப்பில் பா.ரஞ்சித்தின் புரட்சிகரமான, உணர்ச்சிகரமான, வித்தியாசமான மலேசியாவிலும் இந்தியாவிலும் எடுக்கப்பட்ட 'கபாலி' படத்தில் ஓய்வில்லாமல் நடித்ததன் காரணமாக கொஞ்சம் உடம்பிற்கும் மனதிற்கும் ஓய்வு தேவைப்பட்டது. அதையொட்டி இரண்டு மாதங்கள் என்னுடைய புதல்வி ஐஸ்வர்யாதனுஷ் அவர்களுடன் ஓய்வு எடுத்தும், மருத்துவ பரிசோதனை செய்துகொண்டும், நலமாகவும், ஆரோக்கியமாகவும், மிக உற்சாகத்துடனும் தாய் மண்ணிற்கு திரும்பிய எனக்கு 'கபாலி' படத்தின் மிகப்பெரிய வெற்றிச் செய்தியை அமெரிக்காவில் கேள்விப்பட்டதை இன்று நேரடியாக பார்த்து, உணர்ந்து மிக்க சந்தோஷத்தில் இருக்கின்றேன். இப்படத்தை தயாரித்த என்னுடைய நெடுங்கால நெருங்கிய நண்பர் தாணு அவர்களுக்கும், எழுதி இயக்கிய பா,ரஞ்சித் அவர்களுக்கும் அவருடைய குழுவினர் அனைவருக்கும், சக நடிக, நடிகையர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன். இப்படத்தை மிகப்பெரிய வெற்றி படமாக்கிய என்னுடைய அன்பு ரசிகர்களுக்கும், பொதுமக்களுக்கும், இளைஞர்களுக்கும், முக்கியமாக தாய்மார்களுக்கும், பத்திரிகை நண்பர்களுக்கும், தியேட்டர் உரிமையாளர்களுக்கும், விநியோகிஸ்தர்களுக்கும், தலை வணங்கி என்னுடைய மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன். மகிழ்ச்சி
இவ்வாறு ரஜினிகாந்த் தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

More News

பிரபுதேவா-தமன்னாவின் 'தேவி' ரிலீஸ் தேதி

கோலிவுட்டில் நடன இயக்குனர், இயக்குனர் மற்றும் நடிகராக வலம் வந்த பிரபுதேவா கடந்த சில ஆண்டுகளாக பாலிவுட் சென்று முன்னணி இயக்குனர்களில் ஒருவராக விளங்கினார்...

'இணையதளம்' மூலம் ரீ எண்ட்ரி ஆகும் நடிகை சுகன்யா

பாரதிராஜாவின் 'புதுநெல்லு புதுநாத்து' படத்தின் மூலம் தமிழ்த்திரையுலகில் அறிமுகமான நடிகை சுகன்யா அதன் பின்னர்...

'கபாலி'யை கணவருடன் பார்த்த தேசிய விருது நடிகை

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'கபாலி' திரைப்படம் கடந்த வெள்ளியன்று வெளியாகி, தமிழக, இந்திய மற்றும் உலக சாதனை வசூல்களை ஒவ்வொன்றாக தகர்த்து வருகின்றது...

காற்று வெளியிடை' படத்தின் முக்கிய பணி முடிந்தது

இயக்குனர் மணிரத்னம் இயக்கி வந்த அடுத்த படமான 'காற்று வெளியிடை' படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களாக ஊட்டியில் நடைபெற்று வந்த நிலையில் தற்போது முதல்கட்ட படப்பிடிப்பு முடிவுக்கு வந்துள்ளது...

விஷாலின் 'கத்திச்சண்டை' படத்திற்கு இன்னொரு டைட்டில்

சமீபத்தில் வெளியான 'மருது' வெற்றி படத்தை அடுத்து விஷால் நடித்து வரும் அடுத்த படம் 'கத்திச்சண்டை'. அதிரடி ஆக்சன் படமான இந்த படத்தை பிரபல இயக்குனர் சுராஜ் இயக்கி வருகிறார்...