close
Choose your channels

ரசிகர்களுக்கு சூப்பர் ஸ்டார் ரஜினியின் நன்றிக் கடிதம்

Tuesday, July 26, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'கபாலி' திரைப்படம் கடந்த வெள்ளியன்று வெளியாகி உலகம் முழுவதும் பல வசூல் சாதனைகளை செய்து வருகிறது. இந்த படத்தை வெற்றிப்படமாக்கிய தனது ரசிகர்களுக்கு ரஜினிகாந்த் நன்றி தெரிவித்து கடிதம் ஒன்றை தனது கைப்பட எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது:
என்னை வாழ வைக்கும் தமிழக மக்களாகிய அனைவருக்கும் என்னுடைய வணக்கங்கள். 'லைக்கா' தயாரிப்பில் திரு.சங்கரின் இயக்கத்தில் மிக பிரமாண்டமாக உருவாகும் '2.0' மற்றும் நண்பர் தாணு அவர்களின் தயாரிப்பில் பா.ரஞ்சித்தின் புரட்சிகரமான, உணர்ச்சிகரமான, வித்தியாசமான மலேசியாவிலும் இந்தியாவிலும் எடுக்கப்பட்ட 'கபாலி' படத்தில் ஓய்வில்லாமல் நடித்ததன் காரணமாக கொஞ்சம் உடம்பிற்கும் மனதிற்கும் ஓய்வு தேவைப்பட்டது. அதையொட்டி இரண்டு மாதங்கள் என்னுடைய புதல்வி ஐஸ்வர்யாதனுஷ் அவர்களுடன் ஓய்வு எடுத்தும், மருத்துவ பரிசோதனை செய்துகொண்டும், நலமாகவும், ஆரோக்கியமாகவும், மிக உற்சாகத்துடனும் தாய் மண்ணிற்கு திரும்பிய எனக்கு 'கபாலி' படத்தின் மிகப்பெரிய வெற்றிச் செய்தியை அமெரிக்காவில் கேள்விப்பட்டதை இன்று நேரடியாக பார்த்து, உணர்ந்து மிக்க சந்தோஷத்தில் இருக்கின்றேன். இப்படத்தை தயாரித்த என்னுடைய நெடுங்கால நெருங்கிய நண்பர் தாணு அவர்களுக்கும், எழுதி இயக்கிய பா,ரஞ்சித் அவர்களுக்கும் அவருடைய குழுவினர் அனைவருக்கும், சக நடிக, நடிகையர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன். இப்படத்தை மிகப்பெரிய வெற்றி படமாக்கிய என்னுடைய அன்பு ரசிகர்களுக்கும், பொதுமக்களுக்கும், இளைஞர்களுக்கும், முக்கியமாக தாய்மார்களுக்கும், பத்திரிகை நண்பர்களுக்கும், தியேட்டர் உரிமையாளர்களுக்கும், விநியோகிஸ்தர்களுக்கும், தலை வணங்கி என்னுடைய மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன். மகிழ்ச்சி
இவ்வாறு ரஜினிகாந்த் தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment