சூப்பர் ஸ்டார் ரஜினியிடம் ஆசி பெற்ற இளம் நகைச்சுவை நடிகை

  • IndiaGlitz, [Tuesday,February 20 2018]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் விரைவில் அரசியல் கட்சி தொடங்கவுள்ள நிலையில் பிசியாக இருந்தாலும், அவரை தேடி வரும் திரையுலக பிரபலங்களை சந்திக்க அவர் மறுப்பு தெரிவித்ததே இல்லை

அந்த வகையில் வளர்ந்து வரும் நகைச்சுவை நடிகையான வித்யூலேகா, இன்று சூப்பர் ஸ்டார் ரஜினியை அவரது இல்லத்தில் சந்தித்தார். ஒவ்வொரு வருடமும் ரஜினியிடம் ஆசி பெற்று அவரது ஷூட்டிங் கால்ஷீட் புத்தகத்தில் கையெழுத்து வாங்கும் வழக்கம் கொண்ட வித்யூலேகா, இன்று அவரை சந்தித்து கையெழுத்தும் ஆசியும் பெற்றார்

இந்த சந்திப்பு குறித்து வித்யூலேகா தனது சமூக வலைத்தளத்தில் கூறியபோது, 'சூப்பர் ஸ்டாரை சந்தித்த இந்த தினம் மிகவும் அன்பான நாள். ஒவ்வொரு வருடமும் என்னுடைய கால்ஷீட் தேதி புத்தகத்தில் கையெழுத்திடும் ரஜினிகாந்த் அவர்கள் இன்றும் கையெழுத்திட்டு என்னை ஆசிர்வதித்தார். அவரது ஆசியால் இந்த ஆண்டும் எனக்கு நல்ல ஆண்டாக அமையும் என்ற நம்பிக்கை உள்ளது' என்று கூறியுள்ளார்,.

More News

ஃபேஸ்புக் நட்பால் ஏற்பட்ட விபரீதம்: இளம்பெண் பலியான பரிதாபம்

சமூக வலைத்தளங்களான ஃபேஸ்புக், டுவிட்டர் போன்றவற்றால் பல்வேறு நன்மைகள் இருந்தாலும், இதன்மூலம் ஏற்படும் ஒருசில தீமைகளால், சிலசமயம் உயிர்ப்பலியும் ஏற்படும் கொடுமை நடந்து வருகிறது.

கட்சி ஆரம்பிக்கும் முன்பே ஸ்டாலினுக்கு பதிலடி கொடுத்த கமல்

நடிகர் கமல்ஹாசன் நாளை புதிய கட்சி தொடங்குவதை முன்னிட்டு, முதல் பொதுக்கூட்ட நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இன்று மதுரை சென்றார்.

ரஜினியின் 'காலா' படத்தில் பாடும் வாய்ப்பை பெற்ற பிரபலம்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் 'காலா' படத்தின் படப்பிடிப்புகள் முடிவடைந்து தற்போது போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

பிரியா வாரியர் மனுவுக்கு சுப்ரீம் கோர்ட் விதித்த அதிரடி உத்தரவு

மலையாள நடிகை பிரியாவாரியர் ஒரே ஒரு கண்சிமிட்டலின் மூலம் ஒரே நாளில் இந்திய அளவில் பிரபலமானார். கூகுள் தேடலில் முன்னணி நடிகைகளான சன்னிலியோனை முந்தி அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார்.

வருக வருக புது யுகம் படைக்க: முதல் மாநாட்டுக்கு டுவிட்டரில் அழைப்பு விடுத்த கமல்

உலக நாயகன் கமல்ஹாசன் நாளை முதல் தனது அரசியல் பயணத்தை அதிகாரபூர்வமாக தொடங்கவுள்ளார். மதுரையில் நாளை கட்சியின் பெயரையும் கொள்கையையும் அறிவித்துவிட்டு தனது கட்சியின் கொடியையும் அவர் ஏற்றவுள்ளார்.