கபாலி'யில் உள்ள 10 முக்கிய அம்சங்கள்

  • IndiaGlitz, [Saturday,March 05 2016]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் பா.ரஞ்சித் இயக்கி முடித்துள்ள 'கபாலி' திரைப்படத்தின் போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படம் வரும் மே மாதம் வெளிவரும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் இந்த படத்தின் பத்து முக்கிய அம்சங்கள் குறித்த தற்போது பார்ப்போம்

1. கபாலி' ரஜினிகாந்த் குழந்தைகளுக்காக ஒரு பள்ளியை நடத்துகிறார். அந்த பள்ளியில் மெட்ராஸ்' கலையரசன் வாத்தியாராக பணிபுரிகிறார்.

2. அட்டக்கத்தி தினேஷ் 'கபாலி'யின் மாஃபியா கேங்கில் ஒரு உறுப்பினராக நடித்துள்ளார். கபாலியின் ஸ்டைல், மேனரிசம் ஆகியவற்றால் கவரப்பட்டு வருங்கால கபாலிக்கு கனவு காணும் கேரக்டர்

3. அமீர் என்ற கேரக்டரில் நடித்துள்ள ஜான்விஜய், இந்த படத்தில் கபாலியின் நண்பராக நடித்துள்ளார்.

4. இந்த படத்திற்காக ரஜினிகாந்த் 75 நாட்கள் சொந்த தாடியுடன் நடித்துள்ளார்.

5.கபாலி-குமுதவல்லி ரொமான்ஸ் காட்சி ஒன்று கோவாவில் படமாக்கப்பட்டுள்ளது. இருவருக்கும் இடையே உள்ள புனிதமான உறவு இந்த காட்சிகளில் வெளிப்படும் என கூறப்படுகிறது.

6. தாய்லாந்து கேங்ஸ்டராக தன்ஷிகா நடித்துள்ளார். இந்த படத்திற்காக தன்ஷிகா தனது நீளமான முடியை வெட்டி முழுக்க முழுக்க படம் முழுவதும் ஆண் போற தோற்றத்திலேயே வருகிறார்

7. சூப்பர் ஸ்டாருக்கு இந்த படத்தில் பஞ்ச் டயலாக்குகள் இல்லை என்றாலும் அவருடைய ஒவ்வொரு வசனத்திலும் ஆழமான தத்துவங்கள் அடங்கியிருக்குமாம்


8. இந்த படம் 115 நாட்களில் சென்னை, தாய்லாந்து, மலேசியா மற்றும் கோவா ஆகிய பகுதிகளில் படமாக்கப்பட்டுள்ளது.

9. இந்த படத்தில் பழம்பெரும் நடிகர் சங்கிலிமுருகன், கபாலிக்கு அட்வைஸ்ராக நடித்துள்ளார்.

10. 'முத்து' படத்தில் இருந்து கிட்டத்தட்ட அனைத்து ரஜினி படங்களுக்கும் ஏ.ஆர்.ரஹ்மான் தான் இசையமைத்தார். இடையில் 'குசேலன்' மற்றும் சந்திரமுகி மட்டும் விதிவிலக்கு. இந்நிலையில் ரஜினி+ரஹ்மான் காம்பினேஷன் இல்லாமல் வரும் மற்றொரு படம்தான் 'கபாலி