தலைகீழா பார்த்தால் தமிழீழம் தெரிகிறதா? பரபரப்பை ஏற்படுத்திய 'காலா' வதந்தி

  • IndiaGlitz, [Thursday,May 25 2017]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் ரஞ்சித் இயக்கவுள்ள 'காலா' திரைப்படத்தின் டைட்டில் போஸ்டர் இன்று காலை வெளியானது. இந்த போஸ்டரில் ரஜினியின் முகம் மட்டும் தெரியும் வகையில் உள்ளது என்பது அனைவரும் அறிந்ததே
இந்த நிலையில் இந்த போஸ்டரை தலைகீழாக பார்த்தால் தமிழீழம் போல் தெரிவதாக டுவிட்டரில் ஒருசிலர் பதிவு செய்துள்ளனர். மேலும் தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் தனக்குத்தானே சூட்டி கொண்ட பெயர்களில் ஒன்று கரிகாலன் என்றும் கூறப்படுகிறது.
இதை வைத்து பார்க்கும்போது தமிழீழ கருத்துக்களை ரஞ்சித் மறைமுகமாக இந்த படத்தில் கூறப்போவதாக வதந்தி ஒன்று படுவேகமாக டுவிட்டரில் பரவி வருகிறது.