ரஜினியின் ஆசி, ஆஸ்கார் விருதைவிட மேல். ஆர்.கே.சுரேஷ்
Send us your feedback to audioarticles@vaarta.com
சீனுராமசாமி இயக்கிய 'தர்மதுரை' திரைப்படம் கடந்த ஆண்டு வெளிவந்து மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இந்த படம் நல்ல வசூல் பெற்றது மட்டுமின்றி அரசியல்வாதிகள் உள்பட பலர் இந்த படத்தை மனம் திறந்து பாராட்டினர். இந்த படத்தை பாராட்டி எதிர்க்கட்சி தலைவர் இரண்டு பக்க கடிதம் எழுதியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் 'தர்மதுரை' திரைப்படம் 100 நாட்கள் ஓடியதை அடுத்து அப்படத்தின் கேடயத்தை படக்குழுவினர் சூப்பர் ஸ்டார் ரஜினியிடம் கொடுத்தனர். இந்த கேடயத்தை மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்ட ரஜினி, படக்குழுவினர்களை வாழ்த்தி பாராட்டினார்.
சீனுராமசாமியின் படங்களில் தொடர்ந்து வரும் சமூக அக்கறையை பாராட்டிய ரஜினி, தாரைத்தப்பட்டை, மருது போன்ற படங்களில் சிறப்பாக நடித்து முன்னேறி வரும் இந்த படத்தின் தயாரிப்பாளருக்கும் வாழ்த்து தெரிவித்தார்.
இந்த நெகிழ்ச்சியான சந்திப்பு குறித்து ஆர்.கே.சுரேஷ் கூறுகையில், சிறுவயது முதல் சூப்பர்ஸ்டாரின் படங்களை பார்த்து வளர்ந்தவன் நான். அவர் நடிப்பில் வெளியாகும் படங்களை பார்க்க முட்டி மோதி கொண்டு டிக்கேட்டுகளை வாங்கி அவரை வெள்ளித்திரையில்
பார்த்து வியந்தவன் நான். தாரைத்தப்பட்டை படத்தில் எனது நடிப்பு அவரை மிகவும் கவர்ந்ததாகவும், மேலும் வில்லத்தனமான கதாபாத்திரத்தில் தான் நடிப்புத்திறனை முழுமையாக வெளிக்கொண்டுவர முடியுமென்றும், அதை நான் சரியாக செய்துள்ளேன் என்று கூறினார்.
என் தயாரிப்பில் உருவான தர்மதுரை படத்தின் நல்ல தன்மைகளை கூறி படக்குழுவினருக்கு பாராட்டு தெரிவித்தார். மேலும் நான் மேன்மேலும் பல படங்களில் நடித்து சிறந்த நடிகனாய் வரவேண்டும் என்று ஆசிக்கூறினார்.
நான் கடவுளாக நினைத்த சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களை இன்று நேரில் பார்த்ததும் அவரிடம் ஆசிர்வாதம் பெற்றதும் எனக்கு ஆஸ்கார் விருதுக்கும் மேல்' என்று ஆர்.கே.சுரேஷ் கூறினார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Contact at support@indiaglitz.com