close
Choose your channels

99.99 சதவிகிதம் ரஜினி அரசியலுக்கு வர மாட்டார். பிரபல காமெடி நடிகர்

Saturday, May 20, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் அரசியல் பேச்சு குறித்து பல்வேறு அரசியல் தலைவர்களும், திரையுலக பிரமுகர்களும் கூறிய கருத்துக்களை அவ்வப்போது பார்த்து கொண்டு வருகிறோம். கிட்டத்தட்ட அனைவருமே அவர் அரசியலுக்கு வந்துவிடுவார் என்றே கூறி வருகின்றனர். ஒருசிலர் மட்டும் அவர் வரமாட்டார், வரவேண்டாம் என்று கூறி வருகின்றனர். இந்த நிலையில் பிரபல நகைச்சுவை நடிகர் ஆர்.ஜே.பாலாஜி, ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவார் என்ற நம்பிக்கை எனக்கு இல்லை' என்று கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது: ரஜினிகாந்த் ஒவ்வொரு முறையும் பேசும்போது அரசியலுக்கு வருவது காலத்தின் கையில், ஆண்டவன் கையில் என்று 25 வருஷமா கூறி வருகிறார். நான் தீவிரமான சூப்பர் ஸ்டார் ரசிகன் என்ற முறையில் சொல்றேன். அவர் அரசியலுக்கு வருவார் என்ற நம்பிக்கை எனக்கு இல்லை' என்று கூறியுள்ளார்.

மேலும் ரஜினி தனது படங்கள் வெளியாகும்போது மட்டும் அரசியல் குறித்து பேசுவதாக எழுந்த குற்றச்சாட்டு குறித்து ஆர்ஜே பாலாஜி கூறியபோது, 'யாராவது புது ஹீரோ இப்படிப் பண்ணினால் `ஸ்டன்ட்'னு சொல்லலாம். ஆனால், சூப்பர் ஸ்டார் படம் ரிலீஸ் ஆச்சுன்னா, இந்தியா முழுவதும் உள்ள நியூஸ் சேனலில் 'why he is super star?'னு விவாதமே நடத்துறாங்க. `ஷாரூக்கான்கிட்ட இல்லாதது, அமீர்கான்கிட்ட இல்லாதது, சூப்பர் ஸ்டார்கிட்ட என்ன இருக்கு?'னு விவாதிக்கிறாங்க. அதனால, படம் ஓடவைக்கணும்னு ஸ்டன்ட் மாதிரி எனக்குத் தெரியலை. ஆனா, 99.99 சதவிகிதம் ரஜினி, அரசியலுக்கு வர மாட்டார்' என்று கூறினார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment