கமல்-ரஜினி சந்திப்பால் அரசியல் திருப்புமுனை ஏற்படுமா?
Send us your feedback to audioarticles@vaarta.com
திரைப்படத்தில் கூட இணைந்து இனி நடிப்பதில்லை என்று முடிவெடுத்த கமல், ரஜினி அரசியலில் ஒன்று சேரும் காலம் கனிந்துவிட்டதாக கூறப்படுகிறது.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவிற்கு பின்னர் தமிழகத்தை வழிநடத்தி செல்லும் தலைவர் யார்? என்ற கேள்வி பொதுமக்கள் பலர் மனதில் எழுந்தது. ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவது போன்ற ஒரு தோற்றம் ஏற்பட்டவுடன் அரசியல் களம் சுறுசுறுப்பு அடைந்தது. ஆனால் சில லட்டர்பேட் கட்சிகள் அவருக்கு எதிர்ப்பு தெரிவித்து வருவதால் அரசியலுக்கு வருவாரா? அல்லது எதிர்ப்புக்கு பயந்து பின்வாங்கி விடுவாரா? என்ற எண்ணமும் பலர் மனதில் எழுந்துள்ளது.
இந்த நிலையில் தான் பிக்பாஸ் பிரச்சனை எழுந்தது. இதில் தேவையில்லாமல் சில அரசியல்வாதிகள் கமலை சீண்டிவிட அரசியல் பக்கமே தலைகாட்டாத கமல், திடீரென விஸ்வரூபம் எடுத்து நேற்றைய டுவீட்டில் அரசியல் வருகை குறித்து கோடிட்டு காட்டியுள்ளார்.
ஆனால் கமல் மட்டும் தனியாக அரசியல் கட்சி ஆரம்பித்தால் அது ஆட்சியை பிடிக்கும் அளவுக்கு வாக்குகளை பெறுமா? என்பது கேள்விக்குறிதான். இந்த நிலையில் தான் ரஜினி-கமல் சந்திப்பு வெகுவிரைவில் நடைபெறவுள்ளதாம். அதாவது பிக்பாஸ் வீட்டின் செட் அமைந்துள்ள ஸ்டுடியோவில் தான், 'காலா' படத்தின் தாராவி செட்டும் உள்ளது. எனவே கமல், ரஜினி ஒரே நேரத்தில் படப்பிடிப்புக்கு இந்த ஸ்டுடியோவுக்கு வர வாய்ப்பு இருப்பதாகவும், அந்த சமயத்தில் இருவரும் சந்தித்து தற்போதைய அரசியல் நிலவரம் உள்பட பல விஷயங்கள் குறித்து ஆலோசனை செய்யலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
நிஜ வாழ்க்கையில் நல்ல நண்பர்களாக இருக்கும் கமல்-ரஜினி அரசியல் களத்தில் கைகோர்த்து இறங்கினால் ஒட்டுமொத்த திரையுலகம் மட்டுமின்றி தமிழகத்தின் பெரும்பாலான மக்கள் ஆதரவு கொடுப்பார்கள் என்று எதிர்பார்க்கலாம். இப்படி ஒரு திருப்புமுனை சம்பவம் தமிழகத்தில் நடந்தால் தமிழகத்திற்கு உண்மையிலேயே விடிவுகாலம் பிறக்க வாய்ப்புள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கூறி வருகின்றனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout