கமல்-ரஜினி சந்திப்பால் அரசியல் திருப்புமுனை ஏற்படுமா?

  • IndiaGlitz, [Wednesday,July 19 2017]

திரைப்படத்தில் கூட இணைந்து இனி நடிப்பதில்லை என்று முடிவெடுத்த கமல், ரஜினி அரசியலில் ஒன்று சேரும் காலம் கனிந்துவிட்டதாக கூறப்படுகிறது.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவிற்கு பின்னர் தமிழகத்தை வழிநடத்தி செல்லும் தலைவர் யார்? என்ற கேள்வி பொதுமக்கள் பலர் மனதில் எழுந்தது. ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவது போன்ற ஒரு தோற்றம் ஏற்பட்டவுடன் அரசியல் களம் சுறுசுறுப்பு அடைந்தது. ஆனால் சில லட்டர்பேட் கட்சிகள் அவருக்கு எதிர்ப்பு தெரிவித்து வருவதால் அரசியலுக்கு வருவாரா? அல்லது எதிர்ப்புக்கு பயந்து பின்வாங்கி விடுவாரா? என்ற எண்ணமும் பலர் மனதில் எழுந்துள்ளது.

இந்த நிலையில் தான் பிக்பாஸ் பிரச்சனை எழுந்தது. இதில் தேவையில்லாமல் சில அரசியல்வாதிகள் கமலை சீண்டிவிட அரசியல் பக்கமே தலைகாட்டாத கமல், திடீரென விஸ்வரூபம் எடுத்து நேற்றைய டுவீட்டில் அரசியல் வருகை குறித்து கோடிட்டு காட்டியுள்ளார்.

ஆனால் கமல் மட்டும் தனியாக அரசியல் கட்சி ஆரம்பித்தால் அது ஆட்சியை பிடிக்கும் அளவுக்கு வாக்குகளை பெறுமா? என்பது கேள்விக்குறிதான். இந்த நிலையில் தான் ரஜினி-கமல் சந்திப்பு வெகுவிரைவில் நடைபெறவுள்ளதாம். அதாவது பிக்பாஸ் வீட்டின் செட் அமைந்துள்ள ஸ்டுடியோவில் தான், 'காலா' படத்தின் தாராவி செட்டும் உள்ளது. எனவே கமல், ரஜினி ஒரே நேரத்தில் படப்பிடிப்புக்கு இந்த ஸ்டுடியோவுக்கு வர வாய்ப்பு இருப்பதாகவும், அந்த சமயத்தில் இருவரும் சந்தித்து தற்போதைய அரசியல் நிலவரம் உள்பட பல விஷயங்கள் குறித்து ஆலோசனை செய்யலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

நிஜ வாழ்க்கையில் நல்ல நண்பர்களாக இருக்கும் கமல்-ரஜினி அரசியல் களத்தில் கைகோர்த்து இறங்கினால் ஒட்டுமொத்த திரையுலகம் மட்டுமின்றி தமிழகத்தின் பெரும்பாலான மக்கள் ஆதரவு கொடுப்பார்கள் என்று எதிர்பார்க்கலாம். இப்படி ஒரு திருப்புமுனை சம்பவம் தமிழகத்தில் நடந்தால் தமிழகத்திற்கு உண்மையிலேயே விடிவுகாலம் பிறக்க வாய்ப்புள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கூறி வருகின்றனர்.

More News

உன்கிட்ட மனுஷன் பேசுவானா? ஓவியாவிடம் கடுப்பாகிய சக்தி

கமல்ஹாசன் நடத்தி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் நேற்று பங்கேற்பாளர்கள் அனைவருக்கும் ஒரு குடும்ப உறவு கொடுக்கப்பட்டது...

எஸ்.எஸ்.ராஜமெளலியின் அடுத்த படத்தில் மோகன்லால்-ஸ்ரீதேவி?

தென்னிந்திய திரையுலகின் பெருமையை உலகம் முழுவதற்கும் எடுத்து சென்ற பெருமை பிரமாண்ட இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமெளலிக்கு உண்டு. அவருடைய 'பாகுபலி' மற்றும் 'பாகுபலி 2' படங்கள் உலகளாவிய வெற்றியை பெற்று தென்னிந்திய சினிமாவுக்கு கெளரவம் பெற்று கொடுத்தது...

விஜய் ஏன் உயர்ந்த மனிதர்? ஒரு ரசிகரின் நிஜமான, நெகிழ்ச்சியான அனுபவம்

இளையதளபதி விஜய் கிட்டத்தட்ட சூப்பர் ஸ்டார் நெருங்கிவிட்டார், இருப்பினும் அவரிடம் கடந்த 20 வருடங்களுக்கு முன் இருந்த எளிமை அப்படியே உள்ளது.

பாலிவுட்டில் ஒரு கூட்டமே அஜித்துக்காக காத்திருக்கின்றதாம்!

அஜித் நடித்த பல திரைப்படங்கள் தமிழில் மட்டுமின்றி தென்னிந்தியா முழுவதும் நல்ல வசூலை கொடுத்து வருகின்றன. குறிப்பாக தெலுங்கு மாநிலங்களிலும், கர்நாடகத்திலும் அஜித் படங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகின்றது

பைக்கை பார்த்தா காலேஜ் பையன் மாதிரி குஷியாகிவிடுவார் அஜித்: விவேக் ஓபராய்

தல அஜித் நடிப்பில் சிவா இயக்கத்தில் உருவாகியிருக்கும் 'விவேகம்' திரைப்படம் அடுத்த மாதம் வெளியாகவுள்ள நிலையில் இந்த படத்தின் முக்கிய கேரக்டரில் நடித்துள்ள விவேக் ஓபராய் சமீபத்தில் இந்த படம் குறித்தும் அஜித் குறித்தும் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்...