ரஜினிகாந்த்துடன் இணையும் ஆசியாவின் சூப்பர் ஸ்டார்

  • IndiaGlitz, [Tuesday,June 28 2016]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள 'கபாலி' திரைப்படம் ஜூலையில் வெளியாகவுள்ள நிலையில் அவர் நடித்து வரும் இன்னொரு படமான '2.0' படத்தின் படப்பிடிப்பும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ரஜினியும் ஆசிய சூப்பர் ஸ்டார் ஜாக்கி சானும் ஒரே படத்தில் இணைந்து நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது
பிரபல மலேசிய தயாரிப்பாளர் Mohd Rafeezi அவர்கள் சமீபத்தில் அளித்துள்ள பேட்டி ஒன்றில் தான் தயாரிக்கவுள்ள “The Chini Saga' என்ற படத்தில் ரஜினிகாந்த், ஜாக்கிசான் ஆகிய இரண்டு சூப்பர் ஸ்டார்களும் நடிக்கவுள்ளதாகவும் இவர்களுடன் பாலிவுட்டின் பிரபல நடிகை சோனம் கபூர் அவர்களும் இணையவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
இந்த படம் குறித்து நான்கு வருடங்களுக்கு முன்பே திட்டமிட்டிருந்தாலும் மிகப்பெரிய பட்ஜெட் காரணமாக காலதாமதம் ஆகிவிட்டதாகவும், தற்போது 20 மில்லியன் மலேசிய ரிங்கிட் பட்ஜெட்டில் இந்த படத்தை தயாரிக்க திட்டமிட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.
இந்த படம் இந்தியா, நார்வே, இந்தோனேஷிய, தாய்லாந்து, சீனா உள்ளிட்ட நாடுகளில் படமாக்கப்படவுள்ளதாகவும், பெரும்பாலான காட்சிகள் கம்ப்யூட்டர் கிராபிக்ஸிலும் உருவாக்க திட்டமிடப்பட்டிருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.