18 வருடங்களுக்கு பின் இந்தியில் மீண்டும் ரஜினிகாந்த்

  • IndiaGlitz, [Thursday,June 29 2017]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் பா.ரஞ்சித் இயக்கி வரும் 'காலா' படத்தின் படப்பிடிப்பு மும்பையில் கடந்த சில வாரங்களாக நடைபெற்று வந்த நிலையில் இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு நாளையுடன் முடிகிறது. இந்த படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு சென்னை ஸ்டுடியோ ஒன்றில் போடப்பட்டுள்ள 'தாராவி' செட்டில் வெகுவிரைவில் நடைபெறவுள்ளது. ரஜினிகாந்த் தற்போது உடற்பரிசோதனைக்காக அமெரிக்கா சென்றுள்ளதாகவும், அவர் சென்னை வந்தபின்னர் அடுத்தகட்ட படப்பிடிப்பு தொடங்கும் என்றும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் தமிழ், தெலுங்கு மட்டுமின்றி இந்தியிலும் இந்த படம் உருவாகி வருவது அனைவரும் தெரிந்ததே. ஆனால் அதே நேரத்தில் இந்த படம் இந்தியில் டப் மட்டும் செய்யாமல் இந்தி பதிப்பிக்கு என்றே தனியாக காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது.
மேலும் இந்த படத்திற்காக ரஜினிகாந்த் சொந்தமாக டப்பிங் செய்யவும் திட்டமிட்டுள்ளார். 18 வருடங்களுக்கு முன்னர் 'நாட்டாமை' படத்தின் இந்தி பதிப்பிற்காக சொந்தக்குரலில் டப்பிங் செய்த ரஜினி, மீண்டும் சொந்தக்குரலில் இந்தியில் டப்பிங் செய்யவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
தனுஷின் வொண்டர்பார் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் இந்த படத்தில் ரஜினிகாந்த், ஹுமா குரேஷி, ஈஸ்வரிராவ், நானா படேகர், அஞ்சலி பாட்டீல், சமுத்திரக்கனி உள்பட பலர் நடித்து வருகின்றனர். சந்தோஷ் நாராயணன் இந்த படத்திற்கு இசையமைத்து வருகிறார்.