முதல்வர்களுக்கு ரஜினிகாந்த் நன்றி

  • IndiaGlitz, [Monday,December 14 2015]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் 65வது பிறந்த தினம் கடந்த 12ஆம் தேதி அவரது ரசிகர்களால் கொண்டாடப்பட்டது. சென்னை உள்பட தமிழக மக்கள் வெள்ளத்தினால் பாதிப்பு அடைந்துள்ள நிலையில் தன்னுடைய பிறந்த நாளை கொண்டாட வேண்டாம் என்றும் அதற்கு பதிலாக தனது ரசிகர்கள் வெள்ள நிவாரண பணியை மேற்கொள்ளும்படியும் ரஜினிகாந்த் கேட்டுக்கொண்டிருந்தார்.


இருப்பினும் ரஜினிகாந்துக்கு திரையுலகினர், அரசியல்வாதிகள், உள்பட ஏராளமானோர் பிறந்தநாள் வாழ்த்து கூறியிருந்தனர். இந்நிலையில் தனக்கு பிறந்த நாள் வாழ்த்து கூறிய அனைவருக்கும் ரஜினிகாந்த் தனது சமூக வலைத்தளத்தில் நன்றி கூறியுள்ளார். குறிப்பாக மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சன் ஆகியோர்களுக்கு தனது நன்றியை தெரிவித்து கொண்டார்.

மேலும் சென்னைக்குத் தேவையான உதவிகளைச் செய்து வரும் தனது ரசிகர்களுக்கு நன்றி கூறிய ரஜினிகாந்த் இதைத் தாண்டி வேறு எதுவும் தன்னை பெருமைப்படுத்தவோ, மகிழ்ச்சியடையவோ செய்யாது என்றும் கூறியுள்ளார்.

More News

தேவிஸ்ரீ பிரசாத் தந்தை காலமானார்

பிரபல இசையமைப்பாளர் தேவிஸ்ரீ பிரசாத் அவர்களின் தந்தை மாரடைப்பால் இன்று காலை காலமானார். அவருக்கு வயது 61...

'ஈட்டி' திரைவிமர்சனம். கூர்மையான பாய்ச்சல்

புதிய இயக்குனரின் படைப்பு, இன்னும் ஒரு சூப்பர் ஹிட் கூட கொடுக்காத அதர்வா என ஒருபக்கமும், ராசியான நாயகி ஸ்ரீதிவ்யா மற்றும் வெற்றி இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமார் என மறுபக்கத்தையும்...

'எந்திரன் 2' படத்தில் இருந்து விலகிய முக்கிய நடிகர்

பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கவுள்ள 'எந்திரன் 2' படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ள...

சென்னைக்கு 'தங்க மகன்' டீம் கொடுத்த ரூ.1கோடி?

சென்னை வெள்ள நிவாரணத்திற்கு கோலிவுட் திரையுலக நட்சத்திரங்கள் தாராளமாக நிதி வழங்கி வருவது குறித்து அனைவரும் அறிவோம்....

தெறி: விஜய்க்கு சரிக்கு சமமாக டான்ஸ் ஆடும் எமிஜாக்சன்

அட்லி இயக்கத்தில் விஜய் நடித்து வரும் 'தெறி' படத்தின் வசனக்காட்சிகளின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடியுந்தருவாயில் உள்ளது...