எந்திரன் 2' வில்லன் அறிவிப்பு. அதிகாரபூர்வமாக வெளியான பத்திரிகை குறிப்பு

  • IndiaGlitz, [Thursday,December 17 2015]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பில் பிரமாண்டமாக உருவாகவுள்ள 'எந்திரன் 2' படத்தின் படப்பிடிப்பு நேற்று முதல் தொடங்கியது. இந்த தகவலையும், படம் குறித்த முழு விபரங்களையும் படக்குழுவினர் அதிகாரபூர்வமாக பத்திரிகை செய்தி ஒன்றில் வெளியிட்டுள்ளனர்.


நேற்று நடைபெற்ற இந்த படத்தின் துவக்க விழாவில் லைகா குழுமத்தின் தலைவர் சுபாஸ்கரன், இயக்குனர் ஷங்கர், சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், இசைபுயல் ஏ.ஆர்.ரகுமான், ஏமி ஜாக்சன், ஒளிப்பதிவாளர் நிரவ்ஷா, கலை இயக்குனர் முத்துராஜ், மற்றும் பலர் கலந்து கொண்டதாகவும் மேலும் இப்படத்தில் ரஜினிக்கு இணையான கதாபாத்திரத்தில் நடிக்க பிரபல பாலிவுட் நடிகர் அக்ஷ்ய் குமார் உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் அந்த செய்திக்குறிப்பு தெரிவிக்கின்றது.

பெரும் பொருட்செலவில் மிகவும் பிரம்மாண்டமாக லைகா புரோடக்ஷன்ஸ் இப்படத்தை தயாரிக்கவுள்ளதாகவும், ஜுராஸிக்பார்க், ஐயர்ன் மேன் ஆகிய ஹாலிவுட் படங்களுக்கு பணிபுரிந்த லீகசி எபக்ட்ஸ் நிறுவனத்தின் தொழில்நுட்ப கலைஞர்கள் வரவழைக்கப்பட்டு நேற்றைய படபிடிப்பில் கலந்து கொண்டதாகவும் செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் இந்த படத்திற்கு நீரவ் ஷா ஒளிப்பதிவுவாளராகவும், முத்துராஜ் கலைஇயக்குனராகவும், கிராபிக்ஸ் இயக்குனராக ஸ்ரீனிவாஸ் மோகன் அவர்களும், தமிழ்ப்பதிப்பின் வசனகர்த்தாவாக எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களும், ஆஸ்கார் நாயகன் ரசூல் பூக்குட்டி சவுண்ட் டிசைனிங் பணிகளையும் செய்கின்றனர்.

More News

சூர்யா-விஷால்-ஜெயம் ரவியுடன் இணையும் உதயநிதி ஸ்டாலின்

வரும் கிறிஸ்துமஸ் திருநாளில் சூர்யாவின் 'பசங்க 2', வெற்றிமாறனின் 'வில அம்பு', விமல் நடித்த 'அஞ்சல'...

'பசங்க 2' ரிலீஸ்: ரசிகர்களுக்கு சூர்யாவின் அன்பு வேண்டுகோள்

சமீபத்தில் சென்னை மற்றும் கடலூரில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக பாதிக்கப்பட்டவர்களுக்கு கோலிவுட் திரையுலகினர் பெரும் உதவி செய்து வந்தனர் ...

தர்மதுரை: விஜய்சேதுபதியின் மூன்று ஹீரோயின்கள் யார் யார்?

நானும் ரெளடிதான்' வெற்றி படத்தை அடுத்து விஜய்சேதுபதி நடித்து வரும் படம் 'தர்மதுரை. தேசியவிருது பெற்ற இயக்குனர் சீனுராமசாமி...

எளிமையாக நடந்தது அரண்மனை 2 ஆடியோ வெளியீடு

சுந்தர் சி இயக்கிய 'அரண்மனை' திரைப்படம் சூப்பர் ஹிட் ஆகியதை தொடர்ந்து அதன் அடுத்த பாகமான 'அரண்மனை 2'...

முன்ஜாமீனுக்கு முயற்சி செய்கிறாரா சிம்பு?

சமீபத்தில் இணையதளத்தில் வெளியான பீப் பாடலை பாடியவர் மற்றும் இசையமைத்தவர் என கூறப்படும் சிம்பு மற்றும்...