இலங்கை பயணம் ரத்து: ரஜினியின் முடிவுக்கு அரசியல் கட்சி தலைவர்களின் ஆதரவும் எதிர்ப்பும்..
Send us your feedback to audioarticles@vaarta.com
ஈழத்தமிழர்களுக்கு வீடு வழங்கும் விழா ஒன்றில் கலந்து கொள்ள ரஜினி இலங்கை செல்ல திட்டமிட்டிருந்தார். ஆனால் அவர் இலங்கை செல்லக்கூடாது என்று ஒருசில அரசியல் கட்சிகள் கோரிக்கை வைத்ததை அடுத்து இலங்கை பயணத்தை ரத்து செய்வதாக சற்று முன் ரஜினிகாந்த் அறிக்கை ஒன்றின் மூலம் அறிவித்தார். ரஜினியின் இந்த முடிவுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் வரவேற்பும் எதிர்ப்பும் தெரிவித்துள்ளனர்.
விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவன்: "இலங்கை பயணத்தை ரஜினிகாந்த் ரத்து செய்தது மகிழ்ச்சி தருகிறது. இலங்கை பயணத்தை தவிர்த்த நடிகர் ரஜினிகாந்துக்கு பாராட்டு விளம்பரம் தேடுவதற்காக நாங்கள் யாரும் தலையிடவில்லை. ரஜினிகாந்த் வந்தால் பாதகமாக அமையும் என இலங்கைத் தமிழர்கள் கூறினர். அவர் மீது எங்களுக்கு எந்த காழ்ப்புணர்ச்சியும் இல்லை. இலங்கையில் நடைபெறும் நிகழ்ச்சியில் ரஜினிகாந்த் கலந்துகொண்டால் இலங்கை அரசுக்கு ஆதரவு அளிப்பது போல் ஆகிவிடும் சிங்களர்களின் போர் புனிதப் போர் அல்ல; தமிழர்களின் போர்தான் புனிதப்போர்".
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ: "ரஜினியிடம் தொலைபேசியில் கூறியதை நான் விளம்பரம் செய்யவில்லை. விளம்பரத்துக்காக ரஜினிகாந்தின் பயணத்தை அரசியலாக்கவில்லை. ரஜினி தவறான தகவல்கள் அடிப்படையில் இலங்கை செல்லவிருந்தார். ரஜினி ஒரு மாபெரும் மனிதர்".
தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன்: "இலங்கை பயணத்தை ரத்து செய்ததற்கு ரஜினிக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். முள்ளிவாய்க்கால் துன்பங்களை ரஜினிகாந்த் நேரில் கேட்டறிய வேண்டும்".
அ.தி.மு.க அம்மா கட்சியின் செய்தித் தொடர்பாளர் வைகை செல்வன்: "தமிழர்களின் உணர்வை புரிந்து பயணத்தை ரஜினி ரத்து செய்ததற்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்".
தமிழக பா.ஜ.க தலைவர் தமிழிசை சவுந்தரராஜன்: "தனது இலங்கை பயணத்தை ரத்து செய்திருக்க கூடாது. ரஜினிகாந்த் இலங்கை சென்றிருந்தால் அங்குள்ள தமிழர்களுக்கு ஆறுதலாக இருந்திருக்கும். அவர் இலங்கை சென்றிருக்கலாம்" .
பாரதிய ஜனதா தேசிய செயலாளர் எச்.ராஜா: "ராஜபக்சேவிடம் பரிசு பெற்றவர்கள் கொடுத்த நெருக்கடிக்கு பணிந்து இலங்கை பயணத்தை ரஜினி ரத்து செய்யக்கூடாது".
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout