இனிமேல் படங்கள் இயக்க வேண்டாம். தனுஷுக்கு ரஜினி அட்வைஸ்?

  • IndiaGlitz, [Monday,April 10 2017]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஒரு படத்தை பார்த்துவிட்டு அந்த படம் குறித்து பாசிட்டிவ் ஆக ஒரே ஒரு குரல் கொடுத்தால் அந்த வாய்ஸ்க்கு இருக்கும் மதிப்பே தனி. சமீபத்தில் கூட இளையதலைமுறை இயக்குனர்களின் படங்களுக்கு ரஜினி வாய்ஸ் கொடுக்க, அந்த படங்கள் சூப்பர் ஹிட் ஆகியது என்பது தெரிந்ததே.
இந்த நிலையில் யார் யாருக்கோ வாய்ஸ் கொடுக்கும் ரஜினி, தனது சொந்த மருமகன் இயக்கிய படத்திற்கு வாய்ஸ் கொடுக்காமல் இருப்பாரா? ஆனால் தனுஷ் இயக்கிய 'பவர்பாண்டி' படத்தை பார்த்த பின்னர் அவரது வாய்ஸ் வித்தியாசமாக இருந்ததாம்
ஐம்பது வயதுக்கு மேல் உள்ள முதியவர்கள், உற்றார், உறவினர்களை நம்பாமல் தங்களுடைய எதிர்காலத்திற்காக சேமித்து வைத்து கொள்ள வேண்டும் என்பது தான் தனுஷின் 'பவர்பாண்டி' படத்தின் கதையாம். இப்படி ஒரு அழுத்தமான கதையுள்ள திரைப்படத்தை பார்த்த ரஜினி, தனுஷிடம் 'இந்த ஒரு படம் உங்கள் பேரை இன்னும் பத்து வருடங்களுக்கு சொல்லும். தனுஷ் ஒரு படம் இயக்கினாலும், அந்த படம் சரித்திரத்தில் இடம்பெற்றுவிட்ட படம் என்று நாளை வரலாறு சொல்லும். எனவே அடுத்தடுத்து படங்களை இயக்கி இந்த படத்திற்கு கிடைத்த மரியாதையை விட்டுவிட வேண்டாம்' என்று அட்வைஸ் கூறினாராம்.
சூப்பர் ஸ்டாரிடம் இருந்து இப்படியொரு பாராட்டை பெற்ற தனுஷ் இன்னும் இன்ப அதிர்ச்சியில் இருந்து மீண்டு வரவில்லை என்று கூறப்படுகிறது.

More News

வெங்கட்பிரபுவின் அடுத்த படத்தின் நாயகன் - நாயகி இவர்கள்தான்!!

பிரபல இயக்குனர் வெங்கட்பிரபு இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியான 'சென்னை 28' படத்தின் இரண்டாம் பாகம் வெற்றி பெற்ற நிலையில் தற்போது அவர் தனது அடுத்த படத்திற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறார்.

ரூ.24 லட்சம் சம்பாதித்த எஞ்சினியர், விவசாயியாக மாறி ரூ.2 கோடி சம்பாதித்த அதிசயம்

படித்தவர்களாக இருந்தாலும் பாமரராக இருந்தாலும் தனது மகன் ஒரு எஞ்சினியர், டாக்டர் ஆக வேண்டும் என்று ஒவ்வொரு பெற்றோரும் கனவு காண்பது இந்தியாவில் வழக்கமாக உள்ளது. இதேபோன்ற ஒரு சராசரி பெற்றோருக்கு பிறந்த சச்சின் என்பவர் பெற்றோர்களின் விருப்பப்படி எஞ்சினியர் ஆகி ரூ.24 லட்சம் சம்பாதித்த நிலையில் திடீரென மனம் மாறி விவசாயியாக மாற

திரைவிமர்சனம் குறித்து ரஜினி கூறிய குட்டிக்கதை

இன்று நடைபெற்ற 'நெருப்புடா' பாடல் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட விஷால், 'திரைவிமர்சனம் செய்பவர்கள் முதல் மூன்று நாட்களை விட்டுவிட்டு நான்காவது நாள் விமர்சனம் செய்யும்படி கேட்டுக்கொண்டார்...

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் ரத்து குறித்து விஷால் கூறியது என்ன?

நாளை மறுநாள் நடைபெறுவதாக இருந்த சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தலை நேற்றிரவு தேர்தல் ஆணையம் அதிரடியாக ரத்து செய்தது. தேர்தல் ஆணையத்தின் இந்த அதிரடி நடவடிக்கைக்கு ஆதரவும் எதிர்ப்பும் மாறி மாறி பதிவு செய்யப்பட்டு வருகிறது...

விமர்சனம் எழுதும் பத்திரிகையாளர்களுக்கு விஷாலின் அன்பு வேண்டுகோள்

விக்ரம் பிரபு நடித்த 'நெருப்புடா' படத்தின் பாடல் வெளியீட்டு விழா சற்று முன்னர் சென்னையில் நடந்தது. இந்த விழாவிற்கு சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், இளையதிலகம் பிரபு, தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷால் உள்பட பலர் கலந்து கொண்டனர்....