இனிமேல் படங்கள் இயக்க வேண்டாம். தனுஷுக்கு ரஜினி அட்வைஸ்?

  • IndiaGlitz, [Monday,April 10 2017]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஒரு படத்தை பார்த்துவிட்டு அந்த படம் குறித்து பாசிட்டிவ் ஆக ஒரே ஒரு குரல் கொடுத்தால் அந்த வாய்ஸ்க்கு இருக்கும் மதிப்பே தனி. சமீபத்தில் கூட இளையதலைமுறை இயக்குனர்களின் படங்களுக்கு ரஜினி வாய்ஸ் கொடுக்க, அந்த படங்கள் சூப்பர் ஹிட் ஆகியது என்பது தெரிந்ததே.
இந்த நிலையில் யார் யாருக்கோ வாய்ஸ் கொடுக்கும் ரஜினி, தனது சொந்த மருமகன் இயக்கிய படத்திற்கு வாய்ஸ் கொடுக்காமல் இருப்பாரா? ஆனால் தனுஷ் இயக்கிய 'பவர்பாண்டி' படத்தை பார்த்த பின்னர் அவரது வாய்ஸ் வித்தியாசமாக இருந்ததாம்
ஐம்பது வயதுக்கு மேல் உள்ள முதியவர்கள், உற்றார், உறவினர்களை நம்பாமல் தங்களுடைய எதிர்காலத்திற்காக சேமித்து வைத்து கொள்ள வேண்டும் என்பது தான் தனுஷின் 'பவர்பாண்டி' படத்தின் கதையாம். இப்படி ஒரு அழுத்தமான கதையுள்ள திரைப்படத்தை பார்த்த ரஜினி, தனுஷிடம் 'இந்த ஒரு படம் உங்கள் பேரை இன்னும் பத்து வருடங்களுக்கு சொல்லும். தனுஷ் ஒரு படம் இயக்கினாலும், அந்த படம் சரித்திரத்தில் இடம்பெற்றுவிட்ட படம் என்று நாளை வரலாறு சொல்லும். எனவே அடுத்தடுத்து படங்களை இயக்கி இந்த படத்திற்கு கிடைத்த மரியாதையை விட்டுவிட வேண்டாம்' என்று அட்வைஸ் கூறினாராம்.
சூப்பர் ஸ்டாரிடம் இருந்து இப்படியொரு பாராட்டை பெற்ற தனுஷ் இன்னும் இன்ப அதிர்ச்சியில் இருந்து மீண்டு வரவில்லை என்று கூறப்படுகிறது.