'கபாலி'யின் 2வது டீசர் குறித்த முக்கிய தகவல்

  • IndiaGlitz, [Thursday,June 16 2016]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'கபாலி' படத்தின் பாடல்கள் சமீபத்தில் வெளியாகி பட்டிதொட்டி முதல் பட்டணம் வரை சூப்பர் ஹிட் ஆகி வரும் நிலையில் இந்த படத்தின் டிரைலர் ரிலீஸ் குறித்த அறிவிப்பை ரஜினி ரசிகர்கள் மிக ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர்.
இந்நிலையில் இன்று இரவு 8 மணிக்கு 'கபாலி' படத்தின் இசை டீசர் ஒன்று வெளிவரவுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. ஏற்கனவே இரண்டாவது டீசர் கடந்த சிலநாட்களுக்கு முன்னர் வெளிவரும் என்று கூறப்பட்டு பின்னர் அது ஒத்திவைக்கப்பட்டது என்பது தெரிந்ததே.
இன்று இரவு வெளியாகவுள்ள இசை டீசரை வரவேற்க இப்போதே ரஜினி ரசிகர்கள் தயாராகியுள்ளனர். கடந்த மே 1ஆம் தேதி வெளியான 'கபாலி' டீசர் பல உலக சாதனைகளை செய்தது போல இந்த டீசரும் பல சாதனைகளை செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.