close
Choose your channels

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 'கபாலி'- டீசர் விமர்சனம்.

Sunday, May 1, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'கபாலி' படத்தின் டீசர் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே சற்று முன்னர் இணையதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சூப்பர் ஸ்டார் தனக்கே உரித்தான் ஸ்டைலில் நடந்து வரும் காட்சியுடன் டீசர் தொடங்குகிறது. செய்தியாளர் சந்திப்பில் ஏன் கேங்ஸ்டார் ஆனிங்க என்று கேட்கும் கேள்விக்கு அவரது டிரேட்மார்க் சிரிப்பு பார்வையாளர்களை மயங்க வைக்கின்றது.
'யார்ரா அந்த கபாலி, வரச்சொல்றா அவனை என்று கிஷோர் கூறியதற்கு, "தமிழ்ப்படங்கள்ல்ல இங்க மருது வச்சிகிட்டு, மீசையை முறுக்கிட்டு, லுங்கியை கட்டிகிட்ட், நம்பியார் 'ஏ கபாலி' அப்படின்னு சொன்ன உடனே குனிஞ்சுகிட்டு 'சொல்லுங்க எஜமான்' அப்படி வந்து நிப்பானே அந்த மாதிரி கபாலின்னு நினைச்சியாடா...கபாலிடா......என்று ரஜினி கூறும் ஸ்டைல் இருக்கின்றதே...அதற்கு ஈடு இணையே கிடையாது.
ஒரே ஒரு காட்சியில் இளமை ரஜினி, ஒரே ஒரு ஷாட்டில் ராதிகா ஆப்தே ஆகிய ஆச்சரியங்களும் இந்த டீசரில் உண்டு.
சந்தோஷ் நாராயணனின் அதிர வைக்கும் பின்னணி இசை, ஜி.முரளியின் உலக தரத்தில் அமைந்த கேமராவின் கோணங்கள், பிரவீண் கே.எல் அவர்களின் கச்சிதமான எடிட்டிங் ஆகியவை சிறப்பாக அமைந்துள்ள இந்த டீசர் ரஜினி ரசிகர்கள் மட்டுமின்றி அனைத்து தரப்பினர்களையும் நிச்சயம் கவரும் என்பதில் சந்தேகம் இல்லை. அதுமட்டுமின்றி இந்த ஒரு நிமிட டீசர் படத்தின் எதிர்பார்ப்பை வானளவுக்கு உயர்த்திவிட்டது என்று கூறினாலும் அது மிகையாகாது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment