சூப்பர் ஸ்டாரின் சூப்பர் பஞ்ச் வசனங்கள். ஒரு பார்வை

Superstar Rajinikanth Punch Dialogues

தமிழ் திரையுலகில் பக்கம் பக்கமாக வசனம் பேசி வந்த கதாநாயகர்களை சுருக்கமாக அதே நேரத்தில் நறுக்கான வசனம் பேச வைத்த பெருமை மறைந்த இயக்குனர் சிகரம் பாலசந்தர் அவர்களை போய் சேரும். அதேபோல் தமிழ்த்திரையுலகில் 'பஞ்ச் வசனம்' என்ற டிரெண்டை கொண்டு வந்ததே நமது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தான். '16 வயதினிலே' படத்திலேயே 'இது எப்படி இருக்கு' என்ற ஆரம்பித்த பஞ்ச் வசனம் சிவாஜி' படத்தில் இடம்பெற்ற "சும்மா அதிருதுல்ல' வரை தொடர்ந்து கொண்டே உள்ளது.

ரஜினி ஆரம்பித்து வைத்த பஞ்ச் வசனங்களை தற்போது நாலு படங்கள் முடித்த கதாநாயகர்கள்கூட பேசி வருகின்றனர். பஞ்ச் வசனங்கள் என்பதற்கு ஒரு மரியாதையே இல்லாமல் போய்விட்டதால், ரஜினி தற்போது பஞ்ச் வசனங்கள் பேசுவதை நிறுத்திவிட்டார். ரஜினி கடைசியாக நடித்த 'லிங்கா' படத்தில் பஞ்ச் வசனங்கள் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் அவர் பேசும் சாதாரண வசனங்களில் கூட பஞ்ச் இருக்கும் என்பது அனைவரும் அறிந்த ஒன்று.

கெட்ட பையன் சார் இந்த காளி

mullum malarum

ரஜினிகாந்த் நடித்த மிகச்சிறந்த படங்களில் ஒன்று 'முள்ளும் மலரும்'. இந்த படத்தில் உள்ள காளி என்ற கேரக்டரில் ரஜினிகாந்த் நடிக்கவில்லை. உண்மையாகவே வாழ்ந்தார். காளிக்கு கை போனதால் வேலையை விட்டு சரத்குமார் தூக்கிவிடுவார். அப்போது அவர் பேசும் வசனம்தான் 'கெட்ட பையன் சார் இந்த காளி' என்பது. சமீபத்தில் ஜி.வி.பிரகாஷ் நடிக்கவுள்ள ஒரு படத்திற்கு இந்த வசனத்தை தழுவி டைட்டில் வைத்ததில் இருந்தே இந்த வசனம் இன்றளவும் புகழ் பெற்று இருக்கின்றது என்பதை நிரூபிக்கின்றது.

சீவிடுவேன் சீவி

murattu kaalai

கிராமத்து இளைஞனாக, தம்பிகளின் மீது பாசமுள்ள அண்ணனாக ரஜினிகாந்த் நடித்த 'முரட்டுக்காளை' படத்தில் இடம்பெற்ற வசனம்தான் 'சீவிடுவேன் சீவி' என்பது. இந்த வசனத்தை தழுவிதான் தற்போது தனுஷ் 'மாரி' படத்தில் 'செஞ்சிருவேன்' என்ற வசனத்தை பேசியதாக கூறப்படுகிறது.

தீப்பட்டிக்கு ரெண்டு பக்கம் உரசினா தான் தீப்பிடிக்கும், ஆனா இந்த அலெக்ஸ் பாண்டியனுக்கு எந்த பக்கம் உரசினாலும் தீ பிடிக்கும்

moondru mugam

'மூன்று முகம்' படத்தில் இடம்பெற்ற இந்த வசனத்தை உச்சரிக்காதவர்களே இல்லை என்ற அளவுக்கு புகழ்பெற்ற பஞ்ச் வசனம் இது. இப்பவும் கோலிவுட்டில் எந்த நடிகராவது போலீஸ் வேடத்தை ஏற்றால், அது அலெக்ஸ்பாண்டியன் ரஜினி போல் நடிக்க வேண்டும் என்று தான் முயற்சி செய்வார்கள்.

நான் சொல்றத தான் செய்வேன், செய்றத தான் சொல்வேன்

guru sishyan

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், பிரபுவுடன் இணைந்து நடித்த பக்கா காமெடி மற்றும் ஜனரஞ்சகமான திரைப்படம். இந்த படத்தில் இடம் பெற்ற இந்த வசனத்தை அவரே பல படங்களில் ரிப்பீட் செய்துள்ளார் என்பதில் இருந்தே அவருக்கு மிகவும் பிடித்த வசனங்களில் இதுவும் ஒன்று என்பதை புரிந்து கொள்ளலாம்.

நான் சொல்றதையும் செய்வேன், சொல்லாததையும் செய்வேன்

annamalai

'அண்ணாமலை' என்ற சூப்பர் ஹிட் படத்தில் ரஜினி பேசிய வசனம் இது. இந்த வசனம் அவர் படத்திற்காக மட்டும் பேசியது என்பதாக எடுத்து கொள்ளாமல் அவருடைய வாழ்க்கையில் நடந்து கொள்ளும் நடைமுறையாகவும் எடுத்து கொள்ளலாம்.

சில பேர் சொல்லிட்டு செய்றாங்க... சில பேர் செஞ்சிட்டு சொல்றாங்க... நாம செய்றதும் தெரியாது சொல்றதும் தெரியாது

uzhaippali

'உழைப்பாளி' படத்தில் ரஜினி பேசிய சூப்பர் வசனம்தான் இது. 'அண்ணாமலை' 'உழைப்பாளி' போன்ற படங்களில் இருந்துதான் கொஞ்சம் அரசியல் கலந்த வசனங்களை ரஜினி பேச ஆரம்பித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

நான் ஒரு தடவை சொன்னா....நூறு தடவை சொன்ன மாதிரி

baasha

'பாட்ஷா' படத்தில் இடம்பெற்ற இந்த வசனம்தான், அனேகமாக ரஜினி பேசிய பஞ்ச் வசனங்களிலேயே பெஸ்ட் என்று சொல்லும் அளவுக்கு மிகப்பெரிய வரவேற்பை பெற்ற வசனம் இது. இந்த படத்திற்கு பிறகு தமிழ் சினிமாவில் பலர் இந்த வசனத்தை உபயோகித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆண்டவன் சொல்றான் அருணாச்சலம் முடிக்கிறான்

arunachalam

'அருணாச்சலம்' படத்தில் ரஜினி பேசிய இந்த வசனம் அவருடைய ஹைலைட்டான வசனங்களில் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.

சும்மா அதிருதுல்ல

sivaji

பஞ்ச் வசனங்களில் மீது நம்பிக்கை இல்லாத பிரமாண்ட இயக்குனர் ஷங்கர், ரஜினிக்காக வைத்த வசனம்தான் இது. உண்மையிலேயே இந்த வசனம் படத்தை அதிர வைத்தது.

rajinikanth

சூப்பர் ஸ்டார் அவர்கள் திரைப்படங்களில் பேசிய வசனங்களை விட நிஜ வாழ்க்கையில், ஒரு பொது மேடையில் பேசிய வசனம் ஒன்றுக்கு ஈடு இணையே கிடையாது. எந்த வசனகர்த்தாவும் எழுதி கொடுக்காமல் அவரே பேசிய வசனம்தான் 'நான் யானை இல்லை. குதிரை, விழுந்தாலும் டக்குன்னு எழுந்திருச்சிருவேன்' என்பதுதான். இந்த வசனத்திற்கு ஏற்றவாறு, 'பாபா' படத்தின் தோல்வியை அடுத்து இந்த வசனத்தை நிரூபிப்பதுபோல் 'சந்திரமுகி' என்ற மெகா ஹிட் படத்தை ரஜினி கொடுத்து திரையுலகினரை வியக்க வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போதுள்ள முன்னணி கதாநாயகர்கள் முதல் அறிமுகமாகும் கதாநாயகர்கள் வரை எத்தனை நடிகர்கள் பஞ்ச் வசனங்களை பேசினாலும், அந்த வசனங்கள் ரஜினியின் பஞ்ச் வசனங்களோடு ஒப்பிடும்போது ஒன்றுமில்லாமல் போய்விடும். அந்த அளவுக்கு எனர்ஜியான அவருடைய பஞ்ச் வசனங்கள் குறித்து சிலவற்றை மட்டும்தான் இங்கே பார்த்தோம். இன்னொரு சந்தர்ப்பத்தில் இன்னும் விரிவாக பார்ப்போம்.

தமிழ் திரையுலகில் பக்கம் பக்கமாக வசனம் பேசி வந்த கதாநாயகர்களை சுருக்கமாக அதே நேரத்தில் நறுக்கான வசனம் பேச வைத்த பெருமை மறைந்த இயக்குனர் சிகரம் பாலசந்தர் அவர்களை போய் சேரும்....