சூப்பர் ஸ்டார் ரஜினியின் பாராட்டை பெற்ற 'சென்னை என்கிற மெட்ராஸ்'
- IndiaGlitz, [Monday,December 11 2017]
சமீபத்தில் வெளியான 'சென்னை என்கிற மெட்ராஸ்' படத்தின் டிரைலர் சமூக வலைத்தளங்களில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. அண்டர்கவர் இன்வெஸ்டிகேடிவ் ஜர்னலிசம் என்ற புதிய கான்செப்டை கையிலெடுத்துள்ள இயக்குனர் அரவிந்த்குமார் அதை வடசென்னையில் நடைபெறும் சம்பவங்களுடன் இணைத்து விறுவிறுப்பான கதையை உருவாக்கியுள்ளார். சென்னை என்று பெயர் மாறியுள்ள போதிலும், இன்னும் மெட்ராஸ் என்றுதான் வடசென்னை மக்களால் பார்க்கப்பட்டு வருகிறது. அந்த பகுதியில் நடைபெறும் குற்றங்கள், குற்றம் செய்ய தூண்டுபவர்கள் ஆகியவர்களைச் சுற்றியே இந்த கதை இருப்பதால் விறுவிறுப்புக்கு பஞ்சமிருக்காது என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் இந்த டிரைலரை சமீபத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பார்த்து படக்குழுவினர்களை பாராட்டியுள்ளார். இந்த படம் ஒரு புதிய முயற்சி என்றும் பெரிய தயாரிப்புக்கு இந்த படம் ஒரு உந்துதலாக இருக்கும் என்றும் கூறியுள்ளார். படக்குழுவினர்களின் கடின உழைப்பை ரஜினிகாந்த் ஆச்சரியத்துடன் பாராட்டினார். அண்டர்கவர் ஜர்னிலிசம் என்ற கதை விரைவில் பெரிய நடிகர் மற்றும் பெரிய நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாக வாய்ப்பு இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
ஏற்கனவே படக்குழுவினர்களை கலைப்புலி எஸ்தாணு, பாடலாசிரியர் மதன் கார்க்கி ஆகியோர் பாராட்டியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஒளிப்பதிவாளர் ரத்தினவேலு அவர்களின் உதவியாளரான அரவிந்த் குமார் இந்த படத்தை இயக்கி ஒளிப்பதிவு செய்துள்ளார். சுபலேகா சுதாகர், மூணாறு ரமேஷ், மிமி கோபி, கெளரி சங்க,ர் பிரசாந்த் பாலா, ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு ஐந்து இசையமைப்பாளர்கள் இசையமைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.