அரசியலுக்கு வரப்போவதாக அறிவித்த ரஜினிகாந்த் உரையின் முழுத் தொகுப்பு
Send us your feedback to audioarticles@vaarta.com
இன்று ராகவேந்திர கல்யாண மண்டபத்தில் தன் ரசிகர்களை சந்தித்த சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், தான் அரசியலுக்கு வரப்போவதாகவும் தனிக்கட்சி தொடங்கி வருகிற தமிழக சட்டமன்றத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடப் போவதாகவும் அறிவித்தார்.
ரஜினிகாந்த் பேசிய உரையின் முழுத் தொகுப்பை IndiaGlitz தமிழ் வாசகர்களுக்காக இங்கே கொடுக்கிறோம்.
”என்னை வாழ வைக்கும் தெய்வங்களான ரசிகப் பெருமக்களே, தமிழக மக்களே, ஊடக நண்பர்களே,எல்லாருக்கும் என்னுடைய அன்பான வணக்கங்கள். முதலில் நான் ரசிகர்களை எப்படிப் பாராட்டுவதென்றே தெரியவில்லை. ஆறு நாட்களாக கிட்டட்தட்ட ஒரு 6000 பேர் அவ்வளவு கட்டுப்பாடுடுஅனும் ஒழுக்கத்துடனும் இருந்தனர். இந்த கட்டுப்பாடு ஒழுக்கமும் போதும், நாம் என்ன வேண்டுமானாலும் சாதிக்கலாம்..இந்த முறையும் புகைப்படம் எடுக்க முடியாமல் போனவர்களுக்கு விரைவில் வேறு ஏற்பாடு செய்கிறேன் இந்த நிகழ்வை சிறப்பாக நடத்திய ராகவேந்திரா கல்யாண மண்டபத்தின் நிர்வாகிகள் அனைவருக்கும் என் நன்றி, அண்டை வீட்டாருக்கு மிகவும் தொந்தரவாக இருந்திருக்கும். அவர்களது ஒத்துழைப்புக்கு நன்றி. காவல்துறைக்கு என் இதயப்பூர்வமான நன்றி. மீடிய நண்பர்களுக்கும் என் மனமார்ந்த நன்றி.
ரொம்ப பில்டம் ஆயிடுச்சுல்ல!!! (சிரிக்கிறார்). இது நான் பில்டப் கொடுக்கலங்க. தானா உருவாச்சு. எனக்கு அரசியலுக்கு வரதுக்கு பயம் இல்ல. மீடியா பாத்துதான் பெயம் பெரிய பெரிய ஜாம்பவானுங்கல்லாம் மீடியா பாத்தா பயப்படறாங்க. நா ஒரு கொழந்த, எனக்கு எப்டி இருக்கும். காலைல வீட்ட விட்டு வரும்போது போகும்போதெல்லாம் டக்னு டக்னு மைக்க நீட் ஏதாவது கேட்டுடுவாங்க. நா ஏதாவது சொன்ன உடனே அது debate ஆய்டும்.
முந்தா நேத்து போய்கிட்டு இருக்கும்போது திடீர்னு ஒருத்தர் மைக்க நடுவுல உட்டு. சார் உங்க கொழுகைகள்(கொள்கைகள்) என்னன்னு கேக்கறாரு. என்னது கொழுகைகளா? எனக்கு ரெண்டு நிமிஷம் தலை சுத்திடுச்சு. எல்லாருமே சின்னப் பசங்க. Nice Nice. சோ சார் மொதல்லயே என்ன பயமுறுத்தி வெச்சிருக்காரு. ’ சார் இந்த மீடியா கிட்ட மட்டும் ரொம்ப ஜாக்கரதையா இருங்க. ஒரு மீடியா பர்சனாதான் சொல்றேன்’னு சொல்லிருக்காரு. இந்த நேரத்துல நா அவர ரொம்ப மிஸ் பண்றேன். இந்த நேரத்துல அவர் இருந்திருந்தா எனக்கு பத்து ஆனை (யானை) பலமா இருந்திருக்கும் எனிவே, அவரோட ஆத்மா என்கூடவே இருக்கும் .
விஷயத்துக்கு வர்றேன்...
”கர்மண்யேவாதிகாரஸ்தே மா பலேஷு கதாசன”- கண்ணன், குருக்ஷேத்திரத்துல இருக்கற அர்ஜுனனுக்கு சொன்னது.’Put you efforts, Result is mine. உன் கடமைய செய், மிச்சத்த நா பாத்துக்கறேன். யுத்தம் செய், ஜெயிச்சா நாட ஆளுவ. செத்தா வீர சொர்க்கம் அடைவ. யுத்தம் செய்யமாட்டேன்னு போய்ட்டன்னு சொன்னா உன்ன கோழைன்னு சொல்லுவாங்க.
நா எல்லாரையும் ஏற்கனவே முடிச்சுட்டேன். நீ அம்பு விட்றதுதான் பாக்கி அவ்ளோதான். ’.
நா அரசியலுக்கு வறது உறுதி!!! (கைதட்டல் அரங்கை அதிரவைக்கிறது. அடங்க பல நொடிகள் ஆகின்றன. அதுவரை பேசாமல் காத்திருக்கிறார் நீர் அருந்திவிட்டுப் பேச்சை தொடர்கிறார்.)
இது காலத்தின் கட்டாயம். இது காலத்தின் கட்டாயம். வரப்போற சட்டமன்றத் தேர்தலில் நா தனிக்கட்சி ஆரம்பித்து தமிழ்நாடு முழுவதும் 234 தொகுதிகளிலும் நாம் நிற்போம் (போட்டியிடுவோம்). அதுக்கு முன்னால உள்ளாட்சி தேர்தல் வருகிறது. நாட்கள் ரொம்ப கம்மியா இருக்கறதால அதுல போட்டியிடப் போறதில்ல. பாராளுமன்றத் தேர்தல். பற்றி அந்த நேரத்துல நா முடிவெடுப்பேன்.
நான் அரசியலுக்கு பணத்துக்கோ பேருக்கோ புகழுக்கோ நா வரது கெடையாது. அதை நீங்க வந்து, நா கனவுலகூட நினைத்திராத அளவுக்கு ஆயிரம் மடங்கு கொடுத்துட்டீங்க பதவிக்கு (சிரிக்கிறார்). பதவிக்கு எனக்கு ஆசை இருந்திருந்தா 1996-லயே அந்த நாற்காலி என்னத் தேடி வந்தது. அது வேண்டாம்னு தள்ளி வெச்சேன். 45 வயசுலேயே எனக்கு அந்தப் பதவி ஆசை இல்லை. 68 வயசுல அந்த பதவி ஆச எனக்கு வருமா அப்படி வந்தா நா பைத்தியக்காரன் இல்லையா.
நான் ஆன்மீகவாதின்னு சொல்றதுக்கு தகுதியற்றவனா? நோ, பதவிக்காக இல்ல. அப்ப வேறென்ன.
அரசியல் ரொம்ப கெட்டுப்போச்சுங்க. நாட்டு அரசியல் ரொம்ப கெட்டுப்போச்சு. , ஜனநாயகம்...சீர்கெட்டுப்போச்சு. கடந்த ஒரு ஆண்டில் தமிழ்நாட்டில் நடந்த சில அரசியல் நிகழ்ச்சிகள், சம்பவங்கள், ஒவ்வொரு தமிழ் மக்களும் தலைகுனிய வெச்சுடுச்சு.எல்லா மாநிலத்து மக்களும் நம்மள பாத்து சிரிச்சிக்கிட்டுருக்காங்க.
இந்த நேரத்தில் நா இந்த முடிவை எடுக்கவில்லைனு சொன்னால் என்னை வாழவைத்த தெய்வங்களான தமிழக மக்களுக்கு, நல்லது செய்றதுக்கு ஜனநாயகரீதியா நா ஒரு முயற்சிகூட எடுக்கலங்கற குற்ற உணர்வு சாகற வரைக்கும் என்ன தொரத்தும். மாத்தணுங்க, எல்லாத்தையும் மாத்தணும்.
அரசியல் மாற்ற...அதுக்கு நேரம் வந்தாச்சு. Systemஅ மாத்தணும். உண்மையான, நேர்மையான, வெளிப்படையான ஜாதி-மத சார்பற்ற ஒரு ஆன்மிக அரசியல் கொண்டுவரணும். அதுதான் என்னுடைய நோக்கம். அதுதான் என்னுடைய விருப்பம்.அதுதான் என்னுடைய குறி.அது ஒரு தனி மனுஷனால முடியாது. நீங்க தமிழக மக்கள் எல்லாரும் என்கூட இருக்கணும்.
இது சாதாரண விஷயம் இல்ல. எனக்கு தெரியும். ஒரு கட்சி ஆரம்பிச்சு தேர்தல்ல நின்னு ஜெயிக்கறது சாதாரண விஷயம் இல்ல எனக்கு தெரியும். நடுக்கடல்ல நின்னு முங்கி எழுந்து முத்தெடுக்கற மாதிரி. ஆண்டவனுடைய அருள், மக்களுடைய நம்பிக்கை. அவங்களுடைய அபிமானம், அவங்களுடைய அன்பு, அவங்களுடைய ஒத்துழைப்பு, அவங்களுடைய சப்போர்ட் இருந்ததான் நாம இதுல வந்து சாதிக்க முடியும். ஆண்டவனுடைய அருள் மக்களுடைய ஆதரவு ரெண்டும் எனக்குக் கடைக்கும்ங்கற முழு நம்பிக்கை எனக்கு இருக்கு.
பழையகாலங்கள்ல ராஜாக்கள் வந்து அடுத்த நாட்டுக்கு யுத்தத்துக்குப் போய் ஜெயிச்ச அந்த நாடுடைய கஜானாவ கொள்ளையடிப்பாங்க.அந்த அரண்மனைல இருக்கற பொருள் எல்லாம் கொள்ளையடிப்பாங்க. அந்தப் படைத் தலைவர்கள் அந்தப் படை வீரர்கள் நாட்டு மக்கள கொள்ளையடிப்பாங்க. நாடையே கொள்ளையடுப்பாங்க.
இப்ப ஜனநாயகம்ங்கற பேருல எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்த அந்த கட்சி ஆளுங்க பல விதத்துல பல ரூபத்துல ஜனங்கள, மக்கள கொள்ளையடிச்சுக்கிட்டு இருக்காங்க. பழையகால ராஜாக்கள் இன்னொரு நாட்டுக்குப் போய் கொள்ளையடிக்கறாங்க, நீங்க சொந்த நாட்லயே, சொந்த பூமியிலயேகொள்ளையடிக்கறீங்க. இத மொதல்ல மாத்தணும். அந்த சிஸ்டம், ஜனநாயகரீதியா கட்சியிலயே நம்ம மாத்தணும்.
ஒரு கட்சி வேணும்னு சொன்னா தொண்டன்தான் முக்கியம்.தொண்டன்.. அவன் ஆணிவேர் இல்ல, வேரும் மரம், கிளை எல்லாமே தொடன்தான். தொண்டன்லேர்ந்துதான் ஒரு கவுன்சிலர், எம்.ல்.ஏ. எம்.பி. மினிஸ்டர், சிஃப் மினிஸ்டரே உருவாகறது.நா அந்தத் தொண்டர்னு சொல்ல மாட்டேன். எனக்குத் தொண்டர்கள் வேண்டாம். எனக்குக் காவலர்கள் வேணும். அந்தக் காவலர்களுடைய உழைப்பால ஆட்சியமைத்தால், அரசிலிருந்து மக்களுக்கு நியாயமாகப் போய் சேர வேண்டிய செளகரியங்கள், தேவைகள், உரிமைகள், சலுகைகள், அதன்ப் போக வுடாம செய்ற அந்த கும்பல தடுக்கற காவலர்கள் எனக்கு வேணும். பொதுநலமில்லாம சுயநலத்துக்காக எந்த ஒரு அரசு அதிகாரிகிட்டயோ, எம்.பி.கிட்டயோ எம்.எல்.ஏகிட்டயோ நிக்காத காவலர்கள் எனக்கு வேணும்.
நம்மளுடைய ஆட்சில யார் தப்பு செஞ்சாலும்-அரசு அதிகாரியாகட்டும், ஊழியராகட்டும் கட்சிக்காரராகட்டும்- யார் தப்பு செஞ்சாலும் அவர தட்டிக் கேட்கற காவலர்கள் வேணும்இந்தக் காவலர்களை கண்காண்க்கும் பிரஜைகளோட பிரதிநிதிதான் நான்.
தகுந்த வேலைக்கு தகுந்த பதவிக்கு தகுந்த ஆளை நியமித்து அவன் சரியா வேலை செய்றானானு கண்காணிக்கிற பிரஜையோட பிரதிநிதிதான் நான். இதுக்கு அந்த காவலர் படை வேணும் முக்கியமா மொதல்ல. அதை நாம உருவாக்கணும்.
என்னுடைய மன்றங்கள், கிராமத்திலிருந்து நகரம்வரைக்கும் பதிவு செய்த மன்றங்கள் பல ஆயிரக் கணக்குல இருக்கு.பதிவு செய்யாத மன்றங்கள் அதவிட ஒன்றை மடங்கு ரெண்டு மடங்கு அதிகமாவே இருக்கு.பதிவு செய்யாத மன்றங்கள பதிவு செய்ய வெச்சும் பதிவு செய்த மன்றங்கள் பதுப்பிச்சு,இவங்க எல்லாரையும் ஒருங்கிணைக்கணும். அது மொதல் வேலை. இதான் அதிமுக்கியமான வேலை.
இவங்கள எல்லாம் நம்ம ஒருங்கிணைந்து... இது சினிமா இல்லைங்க, அரசியல் நாம காவலர்களா மாறப் போறோம்.நாம மட்டும் பத்தாது. நீங்க எல்லாம் உங்கள சுத்தி இருக்கற, வட்டாரத்துல இருக்கற மக்கள், தாய்மார்கள், பெரியோர்கள், படித்தவர்கள்,படிக்காதவர்கள், இளைஞர்கள் எல்லாரையும் நம்ம மன்றத்துக்குள்ள கொண்டுவரணும். ஒவ்வொரு கிராமத்திலிருந்து நகரம் வரைக்கும் ஒவ்வொரு தெருவுலயும் நம்ம மன்றங்கள் இருக்கணும்இ. து நா கொடுக்கற முதல் பணி .
ஒரே குடைக்குள்ள நம்ம வரணும். வந்த பிறகு கட்டுப்பாடு, ஒழுக்கம். அதோட வந்து நாம ஜனநாயகரீதியில நாம எப்படி சந்திக்கறது தேர்தல அப்டிங்கறதுக்கு நாம கம்ப்ளீட்டா மொதல்ல தயாராகணும். அதுவரைக்கும் நாம அரசியல் பேச வேண்டாம். என்ன உட்பட. என்ன உட்பட. அரசியல்வாதிகள திட்ட வேண்டாம். அன்றாட அரசியல்வாதிகள விமர்சனம் பண்றது குறை சொல்றது வேண்டாம். அறிக்கைவிட்றது, போராட்டம் பண்றது அதுக்குனு நிறைய பேர் இருக்காங்க(நிறுத்துகிறார்).
ஏற்கனவே அரசியல்ங்கற குளத்துல இருக்கறவங்க நீந்திதான் ஆகணும். நீந்தலேன்னு சொன்னா மூழ்கிப் போய்டுவாங்க.நாம இன்னும் குளத்துல இறங்கல. நமக்கு நீந்தத் தெரியும். தரைல நீந்த வேண்டாம்.குளத்துல இறங்கின பிறகு நீந்தலாம்.
நாம எல்லாரும் ஒண்ணா சேர்ந்து அந்தப் படிய தயார் பண்ணுவோம். தயாராக இருப்போம். சட்டமன்றத் தேர்தல் என்னிக்கு வருது அதுக்கு முன்னால உரிய நேரத்துல கட்சிய ஆரம்பித்து மக்கள் மத்தியில் நாம என்ன செய்யப் போறோம். நம்ம செயல்திட்டங்கள் என்ன, இதெல்லாம் செய்யப்போறோம் இதெல்லாம் செய்ய முடியாது, அப்டின்னு உண்மைய எடுத்து சொல்ல, இது செய்யலன்னா மூணு வருஷத்துக்குள்ள நாமளே ரிசைன் பண்றோம் அப்டின்னு மக்கள் மத்தியில போவோம்.
எங்களுடைய மந்திரம் உண்மை! உழைப்பு! உயர்வு!. எங்களுடைய கொள்கை நல்லதே நினைப்போம். நல்லதே பேசுவோம் நல்லதே செய்வோம் நல்லதே நடக்கும்.
வரப்போகிற சட்டமன்றத் தேர்தல் ஜனநாயகப் போரில் நம்ம படையும் இருக்கும். ஆண்டவன் இருக்கான்..
வாழக தமிழ் மக்கள்! வளர்க தமிழ்நாடு! ஜெய்ஹிந்த்.!!!
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments