பிரதமரின் அறிவிப்புக்கு தலைவணங்குகிறேன். ரஜினிகாந்த்

  • IndiaGlitz, [Wednesday,November 09 2016]

பாரத பிரதமர் நரேந்திர மோடி நேற்று இரவு முதல் .500 மற்றும் ரூ.1000 நோட்டுகளை வாபஸ் பெறுவதாக அதிரடியாக அறிவித்தார். இவற்றுக்கு பதிலாக புதிய ரூ.500, ரூ.2000 நோட்டுக்கள் விரைவில் அமலுக்கு வரும் என்றும் அவர் அறிவித்தார்.
கருப்புப்பணம், தீவிரவாதிகளிடம் புழங்கும் பணம் ஆகியவற்றை கட்டுப்படுத்தவே இந்த அறிவிப்பு என்றும் பொதுமக்களுக்கு ஒருசில நாட்கள் இதனால் சிரமங்கள் இருந்தாலும் தியாக மனப்பான்மையுடன் நாட்டின் முன்னேற்றத்திற்காக இதனை ஏற்று கொள்ள வேண்டும் என்று அவர் வேண்டுகோள் விடுத்தார்.
பிரதமரின் இந்த அறிவிப்ப்புக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வரவேற்பு அளித்துள்ளார். அவர் தனது சமூக வலைத்தளத்தில் பிரதமர் மோடியின் செயலுக்கு தலை வணங்குகிறேன். புதிய இந்தியா பிறந்துள்ளது. ஜெய்ஹிந்த்,'' என பதிவு செய்துள்ளார். ரஜினிகாந்த் மட்டுமின்றி பெரும்பாலான திரையுலகினர் பிரதமரின் இந்த அதிரடி அறிவிப்புக்கு வரவேற்பு தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.