இன்னிக்கு 'பேட்ட' நாளைக்கு 'கோட்டை': வைரலாகும் டுவீட்டுக்கள்
- IndiaGlitz, [Friday,September 07 2018]
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் படத்தின் டைட்டில் 'பேட்ட' என்று சற்றுமுன்னர் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த டைட்டில் அறிவிக்கப்பட்ட சில நிமிடங்களில் டுவிட்டரில் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் 'பேட்ட' என்பது டிரெண்ட் ஆகிவிட்டது.
அதுமட்டுமின்றி ரஜினி ரசிகர்களும், நெட்டிசன்களும் 'பேட்ட' குறித்து பஞ்ச் டயலாக்குகளை டுவீட்டி தள்ளுகின்றனர். அவற்றில் சிலவற்றை பார்ப்போம்
இன்னிக்கு 'பேட்ட' நாளைக்கு 'கோட்டை,
தலைவா எங்கள் முதல்வா !!! தமிழ்நாடு இனி எங்கள் பேட்ட,
பேட்ட-யில புகுந்து கோட்டைய புடிச்சிருவோம் தலைவா,
#பேட்ட தொடரும் #வேட்டை இனி அதிரும் #கோட்டை
இது எங்கள் சிங்கத்தின் அரைநூற்றாண்டு வேட்ட
எங்க கோட்டை .. எங்க பேட்டை.. மத்தவன்லாம் மாத்து ரூட்டை..
ஆள வருகிறார் தலைவர் @rajinikanth எம் தமிழ்நாட்டை
தலைவரின் #பேட்ட, தமிழகத்தின் வசூல் வேட்ட
இது தலைவரோட பேட்ட.. தலைவர் கிட்ட வேணாம் உங்க சேட்ட.. அவரோட இடம் செய்ன்ட் ஜார்ஜ் கோட்ட..
இதுபோன்று ஆயிரக்கணக்கான டுவீட்டுகள் டுவிட்டர் இணையதளத்தில் பதிவாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.