ஜெயலலிதா கோஹினூர் வைரம் போன்றவர். நடிகர் சங்க அஞ்சலி கூட்டத்தில் ரஜினிகாந்த் புகழாரம்
Send us your feedback to audioarticles@vaarta.com
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு நடிகர் சங்கம் இன்று அஞ்சலி செலுத்தியது. சென்னை கோடம்பாக்கத்தில் ரஜினிகாந்த் அவர்களுக்கு சொந்தமான ராகவேந்திரா திருமண மண்டபத்தில் இந்த அஞ்சலி கூட்டம் நடைபெற்றது. நடிகர் சங்கத்தலைவர் நாசர் உள்பட நடிகர் சங்கத்தின் நிர்வாகிகள், ரஜினிகாந்த் உள்பட அனைத்து நடிகர், நடிகைகளும் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில் பேசிய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், 'மறைந்த முதல்வர் ஜெயலலிதா பொதுவாழ்வில் வைரம் போன்றவர் என்றும் பொது வாழ்க்கைக்காக தனது சொந்த வாழ்க்கையை தியாகம் செய்தவர் என்றும் புகழாராம் சூட்டினார். மேலும் ஆணாதிக்கம் மிகுந்த சமூகத்தில் தனது முயற்சியால் முன்னுக்கு வந்தவர் ஜெயலலிதா என்றும், போராட்டங்களையே வாழ்க்கையை கொண்டவர் என்றும் அவர் மேலும் கூறினார்.
1996ல் அவருடைய தோல்விக்கு முக்கிய காரணமாக நான் இருந்தாலும் எனது மகள் கல்யாணத்திற்கு அப்பாயின்மெண்ட் கேட்டவுடன் அவரிடம் இருந்து உடனே கிடைத்தது. அவர் திருமணத்தில் கலந்து கொள்ள மாட்டார் என்றே நினைத்தேன். ஆனால் நிச்சயம் திருமணத்திற்கு வருவேன் என்று கூறிய ஜெயலலிதா அதேபோல் கலந்து கொண்டார். அப்படிப்பட்ட பொன்மனம் கொண்டவர் இன்று எங்களுடன் இல்லை
கோடானு கோடி மக்களின் கண்ணீரால் கோஹினூர் வைரமாக புரட்சி தலைவரின் சமாதி அருகில் அடக்கம் செய்யப்பட்டுள்ளார். அவர் போல் சோதனைகளை சாதனைகளாக மாற்றியவர் யாரும் இல்லை. பெரியாத்மா மகாத்மா ஆகிவிட்டது. அவருடைய மறைவிற்கு என்னுடைய கண்ணீர் அஞ்சலி
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Contact at support@indiaglitz.com