close
Choose your channels

இதைவிட எனக்கு வேறு என்ன வேண்டும்? நன்றி தலைவா.. தனுஷ்

Thursday, December 15, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தனுஷ் நடிப்பில் செளந்தர்யா ரஜினிகாந்த் 'வேலையில்லா பட்டதாரி 2' என்ற திரைப்படத்தை இயக்கவுள்ளார் என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு இன்று முதல் தொடங்குகிறது.

இந்த படத்தின் தொடக்கவிழாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், லதா ரஜினிகாந்த், தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு, பொன்வண்ணன், சரண்யா பொன்வண்ணன், இந்த படத்தின் நாயகன் தனுஷ், நாயகி அமலாபால், விவேக் உள்பட பலர் கலந்து கொண்டனர். இந்த படத்தின் தொடக்கவிழா புகைப்படங்களை தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ள தனுஷ், 'சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது படத்தின் தொடக்கவிழாவில் கலந்து கொண்டதை குறிப்பிட்டு 'இதைவிட எனக்கு வேறு என்ன வேண்டும். நன்றி தலைவா' என்று பதிவு செய்துள்ளார்.

இன்று முதல் 'விஐபி 2' திரைப்படம் விறுவிறுப்புடன் தொடங்கவுள்ளதாகவும், 'ரகுவரனை' மீண்டும் விரைவில் திரையில் பார்க்கலாம் என்றும் தனுஷ் குறிப்பிட்டுள்ளார்.,

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment