close
Choose your channels

மலேசியாவில் இரண்டு முறை ரிலீஸ் ஆகிறது 'கபாலி'

Tuesday, June 28, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'கபாலி' திரைப்படம் வரும் ஜூலை 15ஆம் தேதி உலகம் முழுவதும் ரிலீஸ் ஆகவுள்ளது. இந்நிலையில் இந்த படத்தின் மலாய் பதிப்பு மட்டும் ஒரு வாரம் தள்ளிபோவதாகவும், ஜூலை 22ஆம் தேதி மலாய் மொழியில் ரிலீஸ் ஆகும் என்றும் கூறப்படுகிறது. ஆயினும் மலேசியாவில் 'கபாலி' படத்தின் தமிழ்ப்பதிப்பு திட்டமிட்டபடி ஜூலை 15ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் இதுவரை மலேசியாவில் பெரிய ஸ்டார்களின் படங்களே கிட்டத்தட்ட 100 திரையரங்குகளில் மட்டுமே ரிலீஸ் ஆகியுள்ளது. ஆனால் கபாலி' திரைப்படம் மலேசியாவில் கிட்டத்தட்ட 480 திரையரங்குகளில் திரையிட திட்டமிடப்பட்டுள்ளது.
மலேசியாவில் ரஜினிகாந்த் அவர்களுக்கே மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டம் உள்ளது. இந்நிலையில் மலேசிய நடிகர் Rosyam Nor மற்றும் தைவான் நடிகர் Winston Chao ஆகியோர்களும் நடித்துள்ளதால் அந்நாட்டில் இந்த படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் இந்த படத்தின் புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment