உலகிலேயே இதுதான் முதல்முறை. 'கபாலி' செய்துள்ள இன்னொரு சாதனை

  • IndiaGlitz, [Monday,July 11 2016]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து முடித்துள்ள 'கபாலி' படத்தின் புரமோஷன்கள் இதுவரை இந்திய சினிமா மட்டுமின்றி உலக சினிமாக்கள் கூட கண்டிராத வகையில் வானத்திற்கும் பூமிக்கும் புரமோஷன்கள் செய்யப்பட்டு வருகின்றன. ஏர் ஆசியா, ஃபைவ் ஸ்டார் சாக்லேட், ஏர்டெல் ஆகியவை இதுவரை கண்டிராத புரமோஷன்கள். அந்த வகையில் தற்போது இன்னொரு வித்தியாசமான புரமோஷனும் இணைந்துள்ளது.
'கபாலி'யின் பெயரில் தற்போது மாரத்தான் போட்டி ஒன்றை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. வரும் 31ஆம் தேதி மலேசியாவில் உள்ள SEPANG INTERNATIONAL CIRCUIT என்ற இடத்தில் நடத்த திட்டமிட்டுள்ள இந்த மாரத்தான் போட்டி ஆண்கள், பெண்கள், என தனித்தனியான போட்டிகள் நடத்தப்படவுள்ளன. ஐந்து கிமீ தூரம் உள்ள மாரத்தான் போட்டியில் கலந்து கொள்ள பெயர்கள் பதிவு செய்யப்பட்டு வருகின்றன.
உலகிலேயே ஒரு திரைப்படத்தின் பெயரில் மாரத்தான் போட்டி நடத்தப்படுவது இதுதான் முதல்முறை. தலைவர் படம் என்றால் வசூலில்தான் சாதனை செய்யும் என்று இதுவரை பார்த்துள்ளோம். ஆனால் முதல்முறையாக வித்தியாசமான புரமோஷன்களில் வெளிவரும் திரைப்படம் 'கபாலி'தான் என்பது குறிப்பிடத்தக்கது. இன்னும் ரிலீசுக்கு பத்து நாட்களுக்கும் மேல் உள்ள என்னென்ன அதிசயங்கள் நடைபெறவுள்ளது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

More News

தனுஷின் 3வது இந்தி படம் இதுதான்

பிரபல நடிகர் தனுஷ் தற்போது கோலிவுட்டில் 'கொடி', 'தொடரி', 'எனை நோக்கி பாயும் தோட்டா', 'வடசென்னை' மற்றும் கார்த்திக் சுப்புராஜ் படம்...

ஜி.வி.பிரகாஷின் 8வது படம் குறித்த முக்கிய தகவல்

இளையதளபதி விஜய் நடித்த 'தெறி' உள்பட பல சூப்பர் ஹிட் படங்களுக்கு இசையமைத்து முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவராக விளங்கி வரும் ஜி.வி.பிரகாஷ், கோலிவுட்...

முதல்முறையாக ஜி.வி.பிரகாஷ் இல்லாத விஜய் படம்

பிரபல கோலிவுட் இயக்குனர் .விஜய் இயக்கிய முதல் படமான 'கிரீடம்' படத்தில் இருந்து கிட்டத்தட்ட அனைத்து படங்களுக்கும் ஜி.வி.பிரகாஷ்...

பொங்கல், தமிழ்ப்புத்தாண்டு தினங்களில் அஜித்தின் விருந்து

தல அஜித் நடிக்கவுள்ள 57வது படத்தின் பூஜை சமீபத்தில் சென்னையில் எளிய முறையில் நடைபெற்றது என்பதை ஏற்கனவே பார்த்தோம்...

விஜய் 60' படத்தில் கீர்த்தி சுரேஷ் நடிக்கும் கேரக்டர் குறித்த தகவல்

இளையதளபதி விஜய் நடிப்பில் 'அழகிய தமிழ் மகன்' பரதன் இயக்கத்தில் உருவாகி வரும் 'விஜய் 60' படத்தின் சென்னை மற்றும் ஐதராபாத்...