close
Choose your channels

கபாலி' புரமோஷனில் மேலும் ஒரு பிரபல நிறுவனம்

Friday, July 8, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள 'கபாலி' படத்திற்கு இதுவரை இல்லாத அளவில் மிகப்பெரிய அளவில் புரமோஷன் பணிகளை இந்த படத்தின் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு செய்து வருகிறார் என்பது அறிந்ததே. ஃபைவ் ஸ்டார் சாக்லேட்டில் இருந்து ஏர் இந்தியா விமான நிறுவனம் வரை இந்த படத்தின் புரமோஷன்கள் வானத்தை எட்டியுள்ள நிலையில் தற்போது மீண்டும் ஒரு பிரபல நிறுவனமும் 'கபாலி' புரமோஷன்களில் இறங்கியுள்ளது.
அகில இந்திய அளவில் பிரபலமாகியுள்ள தனியார் தொலைத்தொடர்பு நிறுவனமான ஏர்டெல் இந்தியா நிறுவனம் தற்போது 'கபாலி' தயாரிப்பாளருடன் ஒப்பந்தம் செய்துள்ளது. இனி 'கபாலி'யின் ரிங்டோன் முதல் பஞ்ச் வசனங்கள் வரை ஏர்டெல் மொபைலில் ரசிகர்கள் கேட்டு மகிழலாம்.
ரஜினிகாந்த், ராதிகா ஆப்தே, தன்ஷிகா, கலையரசன், தினேஷ், ஜான்விஜய், கிஷோர் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். கலைப்புலி எஸ்.தாணு தயாரித்துள்ள இந்த படத்தை பா.ரஞ்சித் இயக்கியுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment