காலா அப்டேட்: சென்னைக்கு மாறுகிறது தாராவி
Send us your feedback to audioarticles@vaarta.com
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் 'காலா' கரிகாலன் படத்தின் படப்பிடிப்பு மும்பை தாராவி பகுதியில் கடந்த சில நாட்களாக நடந்து வரும் நிலையில், ரஜினி சம்பந்தப்பட்ட காட்சிகளின் படப்பிடிப்பு முடிந்துவிட்டதால் அவர் சென்னை திரும்பவுள்ளதாக கூறப்படுகிறது. சென்னை திரும்பும் ரஜினி மீண்டும் ரசிகர்களை சந்திக்க திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.
இருப்பினும் திட்டமிட்டபடி இந்த படத்தின் மற்ற காட்சிகளின் படப்பிடிப்பு தாராவியில் தொடர்கிறது. இந்த நிலையில் மும்பையில் 40 நாட்கள் படப்பிடிப்பு முடிந்த பின்னர் படக்குழுவினர் சென்னை பூந்தமல்லி அருகே உள்ள தனியார் ஸ்டுடியோ ஒன்றில் போடப்பட்டிருக்கும் தாராவி செட்டில் படப்பிடிப்பை தொடரவுள்ளனர். இங்கு 20 நாட்கள் படப்பிடிப்பு நடைபெறும் என்று கூறப்படுகிறது.
ரஜினிகாந்த், ஹுமா குரேஷி, ஈஸ்வரிராவ், நானா படேகர், அஞ்சலி பாட்டீல், சமுத்திரக்கனி, சம்பத், ரவி கேளா, சாயாஜி ஷிண்டே, பங்கஜ் திரிபாதி, மிகி மகிஜா, மேஜர் பிக்ரம்ஜித், அருள்தாஸ், அரவிந்த் ஆகாஷ், 'வத்திகுச்சி' திலீபன், ரமேஷ் திலக், மணிகண்டன், அருந்ததி, சாக்ஷி அகர்வால், நிதிஷ், வேலு, ஜெயபெருமாள், கறுப்பு நம்பியார், யதின் கார்யகர், ராஜ் மதன், சுகன்யா' ஆகியோர் நடிக்கும் இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கின்றார். இந்த படத்தை தனுஷ் தயாரிப்பது மட்டுமின்றி சிறுவயது ரஜினி கேரக்டரிலும் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Contact at support@indiaglitz.com
Comments